அசோலா வளர்ப்பது எப்படி?
10x4 அடி உள்ள தொட்டிக்கு எந்த அளவு அசோலா விதை தேவை? அசோலா வளர்ப்பது எப்படி? முதலில் 10 அடி நீளமும், 4 அடி அகலமும், 1 முதல் 1½ அடி வர...

அசோலா வளர்ப்பது எப்படி?
முதலில் 10 அடி நீளமும், 4 அடி அகலமும், 1 முதல் 1½ அடி வரை ஆழமும் கொண்ட குழிகளை வெட்டிக்கொள்ள வேண்டும். அதனுள் கெட்டியான பிளாஸ்டிக் பேப்பர், தார்ப்பாயை விரித்துக் கொள்ள வேண்டும். முதலில் அரை அடி உயரத்துக்குச் செம்மண் கலந்த தோட்டத்து மண்ணைப் போட்டு, இரண்டு கைப்பிடி பாறைத் தூள் அல்லது குவாரி மண் அல்லது ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது கிடைக்கும் பாறைத் தூளைத் தூவ வேண்டும்.
நாட்டுப் பசுஞ் சாணம் ஒன்று முதல் 2 கிலோவரை, வேப்பம் புண்ணாக்கு 50 முதல் 100 கிராம்வரை போட்டு, சுமார் ½ அடி தண்ணீர் இருக்குமாறு விட வேண்டும்.
தண்ணீர், மண், புண்ணாக்கு ஆகியவற்றைச் சிறிது நேரம் கிளறிவிட வேண்டும். அதன்பின் சுமார் ½ முதல் 1 கிலோ வரை அசோலா விதைகளைத் தூவ வேண்டும்.
10 முதல் 15 தினங்களில் தொட்டி முழுவதும் அசோலா வளர்ந்துவிடும். இதிலிருந்து தினமும் ½ கிலோ தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அசோலா படுக்கைக் குழிகளைத் தயார் செய்துகொள்ளலாம்.
வாரம் ஒரு முறை ஒரு கிலோ நாட்டுப் பசுஞ் சாணம், ஒரு கைப்பிடி ஆழ்துளைக் கிணறு மண் அல்லது பாறை மண் போட வேண்டும். அத்துடன் மாதத்துக்கு ஒரு முறை அடி மண்ணைக் கொஞ்சம் எடுத்துவிட்டு, புது மண் போட வேண்டும்.
தண்ணீரின் அளவு 7 முதல் 10 செ.மீ. இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 10 - 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரைப் பாதி அளவுக்கு வெளியேற்றிப் புது நீரை மாற்ற வேண்டும்.
6 மாதங்களுக்கு இதிலிருந்து தினமும் அசோலா அறுவடை செய்யலாம். அதிவேகமாக வளரும் தன்மை கொண்ட காரணத்தால், தினமும் அசோலாவை எடுத்துக்கொண்டு புதிதாக வளர்வதற்கு இட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
எந்த நிலையிலும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போக விட்டுவிடக் கூடாது.
Post a Comment