ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்! உபயோகமான தகவல்கள்!!
தாய்க்கொரு தாலாட்டு இசை... மன அழுத்தம் இல்லாத, சீரான வாழ்க்கைக்கு முக்கியமான விஷயம். குறிப்பாக, கர்ப்பகாலத்தில் நல்ல இசையைக் கேட்பது தா...

இசை... மன அழுத்தம் இல்லாத, சீரான வாழ்க்கைக்கு முக்கியமான விஷயம். குறிப்பாக, கர்ப்பகாலத்தில் நல்ல இசையைக் கேட்பது தாய், சேய் இருவருக்கும் ஆரோக்கியமானது என்கிறார்கள் மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும். ``Music for Pregnancy Relaxation” என்ற இந்த ஆப், மேலே சொன்னதை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது.
பிரசவத்தை இலகுவாக்கும் இசையைத் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்துத் தருகிறது இந்த ஆப். “வேறு எந்த வேலைகளையும் பார்க்காமல், இந்த இசையை மட்டும் நேரம் ஒதுக்கிக் கேளுங்கள்” என்ற வேண்டுகோளையும் இந்த ஆப் வைக்கிறது. இதைப் பயன்படுத்தி பலன் பெற்றவர்கள் இதற்கு 4.2 ரேட்டிங் தந்திருக்கிறார்கள். அம்மா ஆகப்போகிறவர்கள் உடனே இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்யுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.ultimategamestudio.musicforpregnancy&hl=en
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தூங்கு தம்பி தூங்கு
தூக்கமின்மை காரணமாக தவிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களுக்குத் தூக்கத்தைத் தரவும், தூக்கச் சமநிலையை ஏற்படுத்தவும் இந்த ஆப் உதவுகிறது. இதில் 8Hz - 9Hz அளவு கொண்ட குறைந்த ஆல்ஃபா அலைவரிசையில் சத்தங்கள் தூக்கத்தை அளிக்கும் வகையில் சேமிக்கப்பட்டுள்ளன.
எட்டுவகையான மியூசிக் சாம்பிள்களும், சூழலுக்கு ஏற்ற 12 சத்தங்களும் இடது மற்றும் வலது காதுகளுக்கு இடையே 8Hz ஒளி அளவு வேறுபாட்டுடன் இசைக்கப்பட்டு தூக்கத்தை வரவழைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 5 மில்லியன் பேர் பயன்படுத்தும் இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.0 ரேட்டிங் பெற்றுள்ளது.
https://play.google.com/store/apps/details?id=imoblife.mtsoundsleep
Post a Comment