இன்சுலின் ஊசி மருந்தை வெளியில் வைக்கலாமா? ஹெல்த் ஸ்பெஷல்!

நான் ஒரு சர்க்கரை நோயாளி. தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறேன். என் வீட்டில் குளிர்பதனப் பெட்டி இல்லை. இன்சுலின் ஊசிமருந்தை வெளியி...


நான் ஒரு சர்க்கரை நோயாளி. தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறேன். என் வீட்டில் குளிர்பதனப் பெட்டி இல்லை. இன்சுலின் ஊசிமருந்தை வெளியில்தான் வைத்துக்கொள்கிறேன். இப்படிச் செய்தால் இன்சுலினுக்கு ஆற்றல் குறைந்துவிடும்; ரத்தச் சர்க்கரை கட்டுப்பட நாளாகும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா? 

உண்மைதான்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஒரு வரப்பிரசாதம். இதை முறையாகப் பயன்படுத்தினால் மட்டுமே முழுமையான பலனைத் தரும். இன்சுலின் அதன் வேதிப்பண்பின்படி ஒரு புரதப்பொருள். இதைக் குளிர்பதனப் பெட்டியிலிருந்து 8 டிகிரி சென்டிகிரேடுவரை உள்ள வெப்பத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். அதிக வெப்பம் அல்லது வெயில் இதன் மீது பட்டால், இன்சுலினுக்குரிய வேதிப்பண்பு சிதைந்துவிடும். இதனால், அதன் ஆற்றல் குறைந்துவிடும்.

இன்சுலின் ஊசி மருந்தை எவ்வாறு பாதுகாப்பது? 

இன்சுலினுக்கு அதிக வெப்பமும் ஆகாது; அதிகக் குளிர்ச்சியும் கூடாது.

இன்சுலினை வெயில் படாத, குளிர்ச்சியான அறையில் வைத்திருக்கலாம்.

சில நாட்களுக்கு மட்டும் என்றால், சாதாரணமாக நாம் வசிக்கும் அறையிலும் வைத்துக்கொள்ளலாம். அறை வெப்பம் 15-லிருந்து 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைவரை இருக்க வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு என்றால், குளிர்பதனப் பெட்டியில் கதவின் உட்பக்கத்தில் வைத்துக்கொள்ளலாம்.

இன்சுலின் மருந்து, இன்சுலின் பேனா, கார்ட்ரிஜ்களை ஃபிரீசரில் வைத்துவிடக் கூடாது.
இன்சுலின் உறைந்துவிட்டால், குழம்பியிருந்தால் அல்லது நிறம் மாறி இருந்தால் பயன்படுத்தக்கூடாது.

குளிர்பதனப் பெட்டி இல்லாதவர்கள், ஒரு சிறிய பிளாஸ்டிக் வாளியில் முக்கால் பங்குக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். அதன் நடுவில் அடிப்பாகம் தட்டையாக உள்ள சிறிய மண்கலசத்தை வையுங்கள். அந்த மண்கலசத்துக்குள் இன்சுலின் ஊசி மருந்தை வைத்துவிடுங்கள். இதை ஒரு மூடியால் மூடி, வீட்டில் வெப்பம் படாத இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது குட்டி ஃபிரிட்ஜ் தயார். இன்சுலின் மருந்துக்குக் குளிர்பதனப் பெட்டி தருகிற அத்தனை பலன்களையும் இதனால் பெற முடியும்.

குளிர்பதனப் பெட்டியிலிருந்து மருந்தை வெளியில் எடுத்ததும் போட்டுவிடக்கூடாது. அது அறை வெப்பத்துக்கு வரும்வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். அல்லது இன்சுலின் பாட்டிலை உள்ளங்கைகளுக்கு நடுவில் வைத்துக்கொண்டு உருட்ட வேண்டும். இப்படிச் செய்தால் விரைவில் அறை வெப்பத்துக்கு மருந்து வந்துவிடும். அதற்குப் பிறகு அதைப் பயன்படுத்தலாம்.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள், பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டிக்கொள்ளுங்கள். இப்படி இரண்டு ஐஸ் கட்டிப் பைகளுக்கு நடுவில் இன்சுலின் மருந்து பாட்டில் அல்லது இன்சுலின் பேனாவை வைத்துக்கொள்ளலாம்.

இப்போது இதற்கெனத் தனி ‘ஐஸ் பை’ (Ice Bag) கிடைக்கிறது. அதையும் பயன்படுத்தலாம்.
இன்சுலின் மருந்தையும் இன்சுலின் பேனாவையும் வீட்டில் அல்லது அலுவலகத்தில் அதிக வெப்பமுள்ள இடங்களில் வைக்கக் கூடாது; வெயில் படும் இடங்களிலும் வைக்கக் கூடாது; சமையலறையில் வைக்கக் கூடாது; தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் வைக்கக் கூடாது. ஹீட்டரைப் பயன்படுத்தும் அறையில் வைக்கக் கூடாது. அவன் (Oven) உள்ள இடத்தில் வைக்கக் கூடாது. குளிர்சாதனப் பெட்டிக்கு அருகிலும் வைக்கக் கூடாது. வெயில் நேரடியாக வரும் வாய்ப்புள்ள ஜன்னலுக்கு அருகில் வைக்கக் கூடாது.

காரில் பயணம் செய்பவர்கள், நிறுத்தப்பட்ட காரில் இதை வைத்துவிட்டுச் செல்லக் கூடாது. ரேடியேட்டர் உள்ள இடங்களிலும் வைக்கக் கூடாது.

தற்போது வரும் நவீன கார்களில் ஏ.சி. உள்ள டேஷ் போர்டு இருக்கிறது. இதில் இன்சுலின் பாட்டிலை வைத்துக்கொள்ளலாம்.

விமானத்தில் பயணம் செய்பவர்கள் இன்சுலின் மருந்தை கார்கோவில் வைக்கக் கூடாது.
பயன்படுத்தத் தொடங்கிய இன்சுலின் ஊசி மருந்தை, அது குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது என்றாலும், அதிகபட்சம் ஒரு மாதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பாட்டிலில் மருந்து மிச்சம் இருந்தாலும், அதன் செயல்திறன் குறைந்துவிடும். ஆகவே, அதைப் பயன்படுத்த வேண்டாம்.

பயன்படுத்தாத, சீல் உடைக்கப்படாத இன்சுலின் மருந்தைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்து, அதன் காலாவதி தேதிவரை பாதுகாக்க முடியும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 5671995824877467256

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item