ப்ரைம்ஸ்டோன் ஜூஸ்-ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவும் ஜூஸ்!
ப்ரைம்ஸ்டோன் ஜூஸ் தேவையானவை: மாம்பழம் - 1, ஆரஞ்சு, சாத்துக்குடி - தலா ½ பழம், நாட்டு சர்க்கரை, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு. செய்முறை:...

தேவையானவை: மாம்பழம் - 1, ஆரஞ்சு, சாத்துக்குடி - தலா ½ பழம், நாட்டு சர்க்கரை, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: ஆரஞ்சு, சாத்துக்குடிச் சுளைகளில் தோல் மற்றும் விதைகளை நீக்கி, மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுக்க வேண்டும். இதனுடன், மாம்பழத்தைத் தோல், கொட்டை நீக்கி, துண்டுகளாக நறுக்கி, நாட்டு சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து, மீண்டும் மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும்.
பலன்கள்: வைட்டமின் ஏ மற்றும் ஃபிளேவனாய்டு இருப்பதால், கண்களுக்கு நல்லது. பொட்டாசியம் சத்து, இதயம் சீராகச் செயல்பட உதவும். இந்த ஜூஸில் உள்ள தாமிரம், ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவும். செரிமானப் பிரச்னை இருப்பவர்களும் இந்த ஜூஸை அருந்தலாம். மூட்டுவலி, இதயநோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இந்த ஜூஸை அதிகம் பருகலாம்.
Post a Comment