சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...!
வா ழைத்தண்டு கூட்டு அல்லது பொரியல் செய்யும்போது சிறிது முருங்கைக்கீரை சேர்த்துச் செய்தால் சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும். மோ ர்க்குழம...

மோர்க்குழம்புக்கு அரைத்து விடும்போது சிறிது ஓமம் சேர்த்து அரைத்தால், குழம்பு வாசனையில் அசத்தும்.
கிழங்கு வகைகளை சீக்கிரம் வேகவைக்க வேண்டுமானால் பத்து நிமிடங்கள் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து, பிறகு வேகவையுங்கள்; எளிதில் வெந்துவிடும்.
முட்டைகோஸைத் துருவி நன்றாக வதக்கி மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் தயார்.
ரசம் வைத்தபிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை ரசத்தில் போட்டு மூடி வைத்து, சிறிது நேரம் கழித்துப் பயன்படுத்தி னால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
குழம்போ, பொரியலோ, கூட்டோ எது செய்தாலும் உப்பு கூடிவிட்டால் கொஞ்சம் தேங் காயுடன் சீரகத்தைச் சேர்த்துப் பொடித்து தூவினால் அதிகப் படியான உப்பு சரியாகிவிடும்.
நெல்லிக்காயைப் பாலில் அரைத்துப் பிழிந்து சாறு எடுத்துக் கொதிக்க வைத்து, தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.
இடுப்புச்சதை குறைய வேண்டுமா..? அன்னாசிப்பழத்தை வெட்டி ஓமம் சேர்த்து, வேகவைத்து வடிகட்டி குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
தினம் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் கட்டுக் குள் இருக்கும்.
பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கிறதா..? எலுமிச்சம்பழத் தோலு டன் சிறிது உப்பு சேர்த்து தேய்த்து வந்தால் பற்கள் வெண்மை நிறம் பெறும்.
தினமும் பப்பாளிப் பழம் சாப்பிட்டுவந்தால்.. கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம் மற்றும் கல்லடைப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மணத்தக்காளிக் கீரைச் சாற்றை பால் அல்லது இளநீருடன் சேர்த்துப் பருகி வந்தால், நாள்பட்ட தோல் வியாதிகள் குணமாகும்.
ஓமத்தை லேசாக வறுத்து, அத்துடன் அரை பங்கு உப்பும், அரைக்கால் பங்கு வெல்லமும் சேர்த்து சிறு உருண்டையாகச் செய்து சாப்பிட்டுவந்தால் வாய்வு சம்பந்தமான பிரச்னைகள் குணமாகும்.
Post a Comment