பாகற்காய் சூப்- ஆரோக்கியத்துக்கு அருமருந்தாகும்!
பாகற்காய் சூப் தேவையானவை: கசப்பு அதிகம் இல்லாத சின்ன சைஸ் பாகற்காய் - 50 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், உப்பு - சிறிது, எண்ணெய் -...

தேவையானவை: கசப்பு அதிகம் இல்லாத சின்ன சைஸ் பாகற்காய் - 50 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், உப்பு - சிறிது, எண்ணெய் - சிறிதளவு
தாளிக்க: வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: பாகற்காயை நான்கு பக்கமும் கீறிவிட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, நீரில் வேகவிட்டு எடுக்க வேண்டும். பாசிப்பருப்பில் சிறிது நீர் சேர்த்துத் தனியாக வேகவைத்து எடுத்து மசித்துக்கொள்ளவும். இதை, பாகற்காய் வெந்த நீரில் கலக்க வேண்டும். கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயத்தாள் போட்டு வதக்கி, சீரகத்தூள் போட்டு, பாசிப்பருப்பு, பாகற்காய் கலந்த நீர்விட்டு ஒரு கொதிவந்ததும் மிளகுத்தூள் தூவி இறக்க வேண்டும். இது ஆரோக்கியத்துக்கு அருமருந்தாகும்.
பலன்கள்: பாகற்காயில் இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம் உள்ளிட்ட தாதுஉப்புகளும் வைட்டமின் சி, பி காம்ப்ளெக்ஸ் சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக, பாகற்காயில் பாலிபெட்டைட்- பி (Polypeptide-P) எனும் பைட்டோநியூட்ரியன்ட் நிறைந்துள்ளது. இது இயற்கை இன்சுலின் எனப்படுகிறது. உடலில் உள்ள சர்க்கரை அளவைச் சீராக்க உதவுகிறது. ரத்தத்தைத் சுத்திகரிக்கிறது. சிறந்த நச்சு நீக்கியாகவும் செயல்படுகிறது.
Post a Comment