உணவு விழிப்புணர்வு -- கொழுப்பும் ரத்த அழுத்தமும்!
உணவு விழிப்புணர்வு 65 கொழுப்பும் ரத்த அழுத்தமும் Dr.A.B.ஃபரூக் அப்துல்லா நேற்றைய எபிசோடின் சின்ன ரீகேப் நாம் உண்ணும் உணவில் 200...
உணவு விழிப்புணர்வு 65
கொழுப்பும் ரத்த அழுத்தமும்
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
நாம் உண்ணும் உணவில் 2000மில்லிகிராமிற்கு மிகாமல் சோடியம் அளவுகளும்
3500 மில்லிகிராமிற்கு குறையாமல்
பொடாசியம் அளவுகளும் இருப்பது ஒருவரை ரத்த கொதிப்பு, மாரடைப்பு, பக்க வாதம் முதலிய நோய்களில் இருந்து காக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. (http://www.who.int/…/news/…/2013/salt_potassium_20130131/en/)
நாம் எடுத்த ரெகுலர் சவுத் இண்டியன் டயட்டையும்
குறைமாவு நிறை கொழுப்பு எனும் பேலியோ உணவு முறையில்
சோடியம் மற்றும் பொடாசியம் அளவுகள் எவ்வளவு இருக்கின்றன என்பதைப் பற்றிய ஆய்வு.
இந்த ஆய்வில் உணவில் சேர்க்கப்படும் டேபிள் சால்ட்டை தனியாக எடுத்துக்கொள்ளாமல், ஒவ்வொரு உணவிலும் இருக்கும் சோடியம் அளவுகளை நேரடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
முதலில் காமன் சவுத் இண்டியன் டயட் பின்வருமாறு
உணவுப் பொருள் - சோடியம் - பொடாசியம்
காலை பால் டீ ஒரு கப் - 100mg - 366mg
காலை உணவு 4 இட்லி சட்னி - 890mg - 300mg
மதியம் அரிசி சாதம் ஒரு கப் - 600mg - 56 mg
சாம்பார் - 600mg - 670mg
100 கிராம் காய்கறிகூட்டு - 75mg - 400mg
இரவு 3 தோசை சட்னி - 823mg - 220mg
இரவுபால் ஒருகப் -100mg-366 mg
மொத்தம் -3188mg சோடியம்
2378mg பொடாசியம்
இது இல்லாமல் நாம் உண்ணும் ஸ்நேக்ஸ் விசயங்களில் உள்ள சோடியம் அளவுகளைப் பாருங்கள்
வடை ( இரண்டு) - 780mg sodium
பப்ஸ் - 253mg sodium
பாப்கார்ன் - 110mg sodium
கோக் - 50mg sodium
பிரட் - 250mg sodium
பிஸ்கட் ஒன்று - 348mg sodium
ஊறுகாய் - 663mg sodium
கருவாடு - 200mg sodium
இவையல்லாமல் ஒரு நாளில் அசைவ உணவுகள் சேர்த்தால்
சிக்கன் 200கிராம்- 190mg sodium
மட்டன் 200கிராம்- 331mg sodium
மீன் 200கிராம் - 300mg sodium
ஆக ஒரு நாளைய சோடியம் உட்கொள்ளுதல் ரெகுலர் சவுத் இண்டியண் டயட்டில் 4000mg ஐ தாண்டுகிறது.
இப்போது நமது குறை மாவு நிறை கொழுப்பு பேலியோ உணவு முறையில் சோடியம் அளவுகளை பார்ப்போம்
உணவு - சோடியம் - பொடாசியம்
காலை ஆம்லெட் 4 முட்டை - 380mg - 500mg
மதியம் - பாதாம் 100கிராம் - 1mg - 705mg
மாலை காய்கறி கீரை சூப் 500கிராம் + 50கிராம் பட்டர் - 225mg- 1225mg
ஸ்நேக்ஸ் கொய்யா காய் - 2mg - 420mg
இரவு - சிக்கன் கிரில்டு 300கிராம் - 1100mg - 830mg
மொத்தம் - 1708mg சோடியம்
3680mg பொடாசியம்
குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறையில் தேவையற்ற திண்பண்டங்கள்/ பொறித்த உணவுகள்/ பேக்கரி ஐட்டங்கள் உண்பதில்லை என்பதால் சோடியம் அளவுகள் ஏறுவதில்லை.
மேலும் , இன்சுலினின் சுரப்பு அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வதால்,
நாம் உணவில் உட்கொள்ளும் சோடியம் சிறுநீரில் வெளியேறிவிடும்.
அதனால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
ஆகவே, ரத்த கொதிப்பு உள்ளவர்கள் குறைமாவு நிறை கொழுப்பு உணவு முறையை எடுத்தால் சோடியம் அளவுகள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும்.
பொடாசியம் அளவுகள் தேவைக்கு கிடைத்து விடுவதால், ரத்த அழுத்தம் சீராக மெய்ன்டெய்ன் ஆகும்.
நாளை
பாலி சிஸ்டிக் ஓவரி (PCOS) எனும் நவீன கால பெண் மலட்டுத்தன்மையும்
கொழுப்பும்
Post a Comment