சளியை அகற்றும் கண்டங்கத்திரி!
க ண்டங்கத்திரி... இது கத்திரிக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு செடியாகும். இதன் பூ கத்திரிச்செடியின் பூவைப்போலவே சிறிது சிவந்து இளம் ஊதா...

வெண்புள்ளி பிரச்னைக்கு இதன் பழம் நல்ல ஒரு மருந்தாகும். அதாவது, கண்டங்கத்திரிப் பழங்களைப் பறித்து சட்டியில் போட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதில் நான்கு பங்கு எடுத்துக்கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து
எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி பக்குவமாக வடிகட்டி வெண்புள்ளி உள்ள இடங்களில் பூசி வந்தால் மறையும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுத்தால் பலன் கிடைக்கும். பல்லில் உள்ள கிருமிகளைப் போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். தீயில் கண்டங்கத்திரி விதைகளைப் போட்டால் வரக்கூடிய புகையை பற்களின் மேல்படும்படி செய்தால் வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட, புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும். அதிக உஷ்ணமாகி சிறுநீர் இறங்காமல் வலி ஏற்படும்போது கண்டங்கத்திரி இலைச்சாற்றுடன் சமஅளவு தேன் கலந்து ஒருவேளை சாப்பிட்டாலும் குணம் கிடைக்கும்.
Post a Comment