பளிச் லாபம் 15 பங்குகள்!
ப ங்குச் சந்தையில், நீண்டகால அடிப்படையில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் கிடைக்கும் என்பதை உணர்ந்த பெரும்பாலான முதலீட்டாளர்கள், எஸ்ஐபி ...

இதில் இந்தியப் பங்குச் சந்தை, வரலாறு காணாத வகையில் பெரும் சரிவுக்கு உள்ளான கடந்த 2008-ம் ஆண்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்ஐபி வருமானம்!
ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் எஸ்ஐபி (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) முறையின் மூலம் தொடர்ந்து பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் சென்செக்ஸ் குறியீட்டு ஃபண்டு களில் முதலீடு செய்திருந்தால், அவருக்கு 62 சதவிகிதம் வருமானம் கிடைத்திருக்கும்.
அதுவே இங்கே தரப்பட்டுள்ள 15 முன்னணி நிறுவனப் பங்குகளில், அதே தொகையை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்திருந்தால், அவர் ஈட்டிய சராசரி வருமானம் 1,360 சதவிகிதமாக இருந்திருக்கும்.(பார்க்க : அட்டவணை-1)
அட்டவணை 1-ல் தரப்பட்டுள்ள பங்குகளில் மாதம் ரூ.1000 முதலீடு செய்திருந்தால், வருமானம் எவ்வளவு?
மாதம் ரூ.1,000 எஸ்ஐபி மூலம் சென்செக்ஸ் பங்குகளில் முதலீடு செய்திருந்தால் 10 ஆண்டுகளில் ரூ.74,400 லாபம் கிடைத்திருக்கும். (இது 62% வருமானம்)
மாதம் ரூ.1,000 எஸ்ஐபி மூலம் அஜந்தா பார்மா பங்கில் முதலீடு செய்திருந்தால் 10 ஆண்டுகளில் ரூ.94,16,500 வருமானம் கிடைத்து இருக்கும். (7,847% வருமானம்)
மாதம் ரூ.1,000 எஸ்ஐபி மூலம் பெர்ஜர் பெயின்ட்ஸ் பங்கில் முதலீடு செய்திருந்தால் 10 ஆண்டுகளில் ரூ.9,75,700 வருமானம் கிடைத்திருக்கும் (813% வருமானம்).
மாதம் ரூ.1,000 எஸ்ஐபி மூலம் பிடிலிட்டி பங்கில் முதலீடு செய்திருந்தால், 10 ஆண்டுகளில் ரூ.5,78,200 வருமானம் கிடைத்திருக்கும். (482% வருமானம்)
எஸ்ஐபி முறையின் மூலம் மாதம் 1,000 ரூபாயை இந்த 15 நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால், 10 ஆண்டுகளில் சராசரியாக ரூ. 16,33,500 வருமானம் கிடைத்திருக்கும். (1,360% வருமானம்) (பார்க்க : அட்டவணை 2)
எஸ்ஐபி முறையின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டாக வேண்டும்.
எஸ்ஐபி போன்ற தொடர் முதலீட்டு முறை மூலம் பட்டியலிடப்பட்ட பங்குகளில் முதலீடு செய்துவந்தால் நீண்ட காலத்தில் (10, 15 ஆண்டுகள்) நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.
பங்குச் சந்தை அவ்வப்போது ஏற்ற, இறக்கங் களுக்கு உட்படக்கூடியது. எஸ்ஐபி முதலீட்டு முறை, அந்த ஏற்ற இறக்கங்களை ஸ்மார்ட்டாக கையாண்டு முதலீடு செய்ய சிறந்த உத்தி ஆகும்.
நேரடியாக நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் குறிப்பாக, சிறு முதலீட்டாளர்கள் எஸ்ஐபி முறை மூலம் இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்து, நீண்ட காலத்தில் நியாயமான வருமானத்தை ஈட்ட முடியும்.
துணிந்து ரிஸ்க் எடுத்து நிறுவனப் பங்குகளில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கக்கூடும்.
எஸ்ஐபி அடிப்படையில் முதலீடு செய்து, வரும் பத்து ஆண்டுகளில் சிறப்பான வருமானத்தைப் பெற வாய்ப்புள்ள 15 நிறுவனப் பங்குகள் (பார்க்க : அட்டவணை 3) குறித்து விரிவாக பார்ப்போம்.
அடுத்துவரும் பத்து ஆண்டுகளில் இந்தப் பங்குகளில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வந்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். அப்படி லாபம் விரும்புபவர்கள் பின்வருமாறு செய்யவேண்டும்.
1. இந்த 15 பங்குகளை உங்கள் விருப்பத்துக்கேற்ப ஐந்து பங்குகள் வீதம் A, B மற்றும் C என்று மூன்று குழுக்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.
2. முதல் மாதம் குழு A-வில் உள்ள பங்குகள் அனைத்திலும் நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையை சமமாகப் பிரித்து முதலீடு செய்யுங்கள். அதேபோல் இரண்டாவது மாதம் B-யில் உள்ள பங்குகளிலும், மூன்றாவது மாதம் C-யில் உள்ள பங்குகளிலும் சம தொகையை முதலீடு செய்யுங்கள்.
3. நான்காவது மாதம் குழு A-வில் முன்பு நீங்கள் செய்த முதலீட்டில், இண்டெக்ஸ் வருமானத்தைத் தாண்டி வருமானம் கொடுத்த நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் மட்டும் உங்களுடைய முந்தைய முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்யுங்கள். ஒருவேளை எந்த நிறுவனமும் இண்டெக்ஸ் ஃபண்டைவிட அதிக வருமானம் தரவில்லை எனில், அந்த மாதத்துக்கான முதலீட்டை இண்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள்.
4. அடுத்து வரும் மாதங்களில் இதேபோல குழு B மற்றும் C-யில் உள்ள பங்குகளின் வருமானத்தை இண்டெக்ஸ் வருமானத்துடன் ஒப்பிட்டு அதற்கேற்ப முதலீடு செய்யுங்கள்.
5. இந்த முறையை சுழற்சியாக ஒவ்வொரு மாதமும் செய்துவரவேண்டும். இந்த உத்தி, காலாண்டு அடிப்படையிலான நிறுவனப் பங்கு களின் செயல்பாட்டை வைத்து முதலீடு செய்வதாகும்.
உங்களின் முதலீடு இப்படி நீண்ட காலத்துக்கு தொடர்ந்து மேற்கொள்வதாக இருக்க வேண்டும். இதன் மூலம் பங்குச் சந்தை முதலீட்டில் இருக்கும் ரிஸ்க் என்பது நீண்ட காலத்தில்தான் பரவலாக்கப்படுகிறது. இது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் (இண்டெக்ஸ் ஃபண்ட்) முதலீட்டுக்கும் பொருந்தும். இந்த எஸ்ஐபி முதலீட்டு உத்தி மூலம் இண்டெக்ஸ் வருமானத்தைக் காட்டிலும் அதிக லாபம் தரும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய முடியும். அதேசமயம் அப்படி வருமானம் தராவிட்டால் அதை அடையாளம் கண்டு முதலீட்டை இண்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்டுக்கு மாற்றி நியாயமான வருமானத்தைப் பெற முடியும்.நேரடிப் பங்குகளில் ரிஸ்க் எடுக்க தயக்கம் உள்ளவர்கள் இண்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தாலே போதுமானது.
டிஸ்க்ளெய்மர் : கட்டுரையின் ஆசிரியரோ, இண்டஸ்வெல்த் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களோ இங்குக் குறிப்பிட்டுள்ள பங்குகளை வைத்திருக்கவோ, வர்த்தகம் செய்யவோ வாய்ப்புள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஆசிரியரின் நிதிநிலை விவரங்கள் மற்றும் ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையிலான சொந்தக் கருத்துகளே. இந்தக் கட்டுரையின் நோக்கம் தனிநபர்களுக்கு எந்தவித முதலீட்டு ஆலோசனையையும் அறிவுரையையும் வழங்குவதற்காக எழுதப்படவில்லை. ஆசிரியர் இங்குக் குறிப்பிட்டுள்ள பங்குகளில் எந்தவொரு உறுதியான வருமானத்திற்கும் உத்தரவாதம் அளிக்கவில்லை. முதலீட்டு முடிவுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்பதை வாசகர்கள் உணர்ந்து, முதலீடு செய்வதற்கு முன் தங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனைப் பெற்று பின்னர் முதலீடு செய்வது நல்லது.
பிரவீன் ரெட்டி, செபி சான்றிதழ் பெற்ற முதலீட்டு நிபுணர். இண்டஸ்வெல்த் முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனர்.
Post a Comment