புதுவையில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கியது!!

புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடைத்துறை வளாகத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் இயங்கி வந்தது. இந்த பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு ரூ.60...

passport புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடைத்துறை வளாகத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் இயங்கி வந்தது. இந்த பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு ரூ.60 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு நவீன மயமாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. 

விழாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை செயலாளர் முக்தேஸ்பர்தேசி தலைமை தாங்கினார். சென்னை பாஸ்போர்ட் மண்டல அதிகாரி பாலமுருகன் வரவேற்றார். முதல்அமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி, ரிப்பன் வெட்டி பாஸ்போர்ட் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:–

புதுவையில் பிரெஞ்சு குடிமக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். புதுவையிலிருந்து அடிக்கடி வெளிநாட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. இதனால் பாஸ்போர்ட் எடுப்பதற்கு முன்பு சென்னை செல்ல வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்றி புதுவையிலேயே பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க வேண்டும் என்று எண்ணினோம். இதற்கு முயற்சிகள் எடுத்து சேவை மையம் உருவாக காரணமாக இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி.
புதுவை ஒரு சுற்றுலாதலம். புதுவை தற்போது கல்விக்கேந்திரமாகவும் உருவாகியுள்ளது. இதனால் ஆண்டுக்கு 2 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளும், 500 மருத்துவ பட்டதாரிகளும் படித்து முடித்து வெளியேறுகின்றனர். இவர்கள் வெளிநாடுகளில் வேலைக்கு செல்கின்றனர். திருமணம் முடிந்து மனைவி, தாய், தந்தையையும் வெளிநாடு அழைத்து செல்கின்றனர். கிராமத்திலிருந்து பல பெரியவர்கள் வெளிநாட்டிற்கு செல்கின்றனர். இதற்கு அடிப்படை காரணம் கல்விதான்.

கடந்த காலங்களில் பாஸ்போர்ட் கிடைக்க குறைந்தது 3 அல்லது 4 மாதமாகும். போலீசார் ஆய்வுக்கு பிறகுதான் பாஸ்போர்ட் வழங்கப்படும். தற்போது 3 நாட்களில் பாஸ் போர்ட் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். பாஸ்போர்ட் வழங்கிய பிறகு போலீஸ் ஆய்வு நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

புதுவை காரைக்கால் மட்டுமில்லாமல் தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் புதுவையில் பாஸ்போர்ட் எடுக்கலாம். கடந்த காலங்களை விட பாஸ்போர்ட் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு புதுவையை கல்விக்கேந்திரமாக உருவாக்கியதுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் நேரு, பாலன், வாரியத்தலைவர் ஞானசேகரன், தலைமை செய லாளர் மனோஜ்பரிதா, நிதித்துறை செயலாளர் சந்திரகர்பர்தி, பாஸ்போர்ட் மண்டல அதிகாரிகள் சசிக்குமார், லிங்கசாமி, மணிசர்ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். உதவி பாஸ்போர்ட் அதிகாரி பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

Related

உபயோகமான தகவல்கள் 640680415166899028

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item