வாசகிகள் கைமணம் ஃப்ரூட் பேடா... ஓட்ஸ் வடை!
வாசகிகள் கைமணம் ஃப்ரூட் பேடா... ஓட்ஸ் வடை! அவல் - சேமியா - ஓட்ஸ் வடை தேவையானவை : அவல், பொட...

செய்முறை: தயிரில் உப்பைக் கலக்கவும். இதில் அவல், ஓட்ஸ், சேமியாவைச் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறிய பொருட்களுடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். பின்னர் நறுக்கிய காய்களை வதக்கி சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயைக் காயவிட்டு, செய்துவைத்த கலவையை சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு இருபுறமும் வேகவிட்டு, எண்ணெய் வடித்து எடுத்து வைக்கவும்.
வடை மாவு தளர இருந்தால் கடலை மாவு அல்லது சோள மாவு கொஞ்சம் சேர்த்து வடை தட்டலாம்.
செய்முறை: அரிசியைக் கழுவி, உதிர் உதிராக சாதம் வடித்து வைக்கவும். பச்சைப் பட்டாணியை ஆவியில் வேகவைத்து தனியே வைக்கவும். தேங்காயை பல்லு பல்லாக மிகவும் சிறிதாக நறுக்கி வைக்கவும். கேரட்டை பொடியாக நறுக்கி வைக்கவும். மாங்காயைத் தோல் சீவி, துருவி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, முந்திரியை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். பின்பு எண்ணெயில் கடுகை சேர்த்து, பொரிந்ததும் கடலைப்பருப்பு போட்டு, சிவந்ததும் மாங்காய் துருவல், சேர்த்து வதக்கவும். இதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப் போட்டு.... நறுக்கிய இஞ்சி, கேரட், கறிவேப்பிலை, தேங்காய்த் துண்டுகள், வெந்த பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, சாதத்தைப் போட்டுக் கிளறி, வறுத்த முந்திரி சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும்.
செய்முறை: வாணலியில் நெய் விட்டு ஆப்பிள், கேரட்டை தனித்தனியே வதக்கி இரண்டையும் சேர்த்து, பால் விட்டு, வேகவிடவும். வெந்து பால் வற்றியதும் நறுக்கிய பாதாம், முந்திரி, பேரீச்சை மற்றும் திராட்சை, மில்க்மெய்டு சேர்த்துக் கிளறி, உருட்டும் பதம் வந்தவுடன் வேறு பாத்திரத்துக்கு மாற்றி ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து, அடுத்து வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து நீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து 30 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையில் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும். சர்க்கரை கரைந்து கொதி வரும்போது குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்து (கொதிக்கும்போது ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் பூத்து வராமலிருக்கும்), ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி வைக்கவும். இதுதான் ஜீரா. பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக எடுத்து பூரியாக தேய்த்து, நடுவில் ஆப்பிள் - கேரட் கலவையை வைத்து ஓரத்தில் தண்ணீர் தடவி விருப்பம் போல் மடித்து வைத்துக்கொள்ளவும். இதுதான் பேடா. வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மிதமான சூட்டில் இருக்கும்போது பேடாக்களைப் போட்டு பொரித்து எடுத்து ஜீராவில் போட்டு 15-20 நிமிடம் ஊறிய பின் பரிமாறவும்.
விருப்பப்பட்டால், மேலாக ஐஸ்க்ரீம் வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
Post a Comment