வெண்டைக்காய் இறால் தீயல்! இஸ்லாமிய உணவுகள்!!
வெண்டைக்காய் இறால் தீயல் தேவையானவை தேங்காய் துருவியது - 1கப் வெண்டைக்காய் 100 கிராம் ...
https://pettagum.blogspot.com/2015/10/blog-post_30.html
|
வெண்டைக்காய் இறால் தீயல்
தேவையானவை
- தேங்காய் துருவியது - 1கப்
- வெண்டைக்காய் 100 கிராம் 1" துன்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
- இறால் - சுத்தமாக கழுவியது 1கப்
- வெங்காயம் - நறுக்கியது 1 மேசைகரண்டி
- முழு தனியா 2 மேசைகரண்டி
- சிவப்பு மிளகய் - 10 காரதிற்க்கு ஏற்ற மாதிரி அடிகமாக்கி கொள்ளவும்
- மஞசள் தூள் - 1/2 தே.கரண்டி
- சோம்பு- 1/2 தே.கரண்டி
- புளி கரைசல் ௧ கப்
- மிளகு 1 தே.கரண்டி
- உப்பு
- கடுகு ௧தே.க
- கறிவேப்பிலை 1கொத்து
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து,சூடானவுடன் தேங்காய் துருவல்,தனியா,மிளகாய்,மிளகு,சோம்பு,கறிவேப்பிலை,வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.(கருகிவிடாமல் பார்த்தூக்கொள்ளவும்
- தேங்காய் நன்றாக சிவந்ததும் இரக்கி லேசாக ஆற விடவும்.
- பின்பு மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்
- அடுப்பில் சட்டியை வைத்து 1தே.க எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,தாளித்து சிறிது வெங்காயம் போட்டு சிவக்க விடவும்
- புளி கரைசலில் அரைத்த மசாலா போட்டு கலந்து உப்பு,புளிப்பு காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- சட்டியில் வெஙாயம் சிவந்ததும் அரிந்து வைத்துள்ள வென்டைகாயய் போட்டு கொள கொளப்பு பொகும்வரை வதக்கவும்
- அடுத்து இராலை போட்டு சிறிது வதக்கி குழம்பை அதில் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்
-
ஆயத்த நேரம் : 15 நிமிடம்
சமைக்கும் நேரம் : 15 நிமிடம்
பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
|
|
|
|
|
|
Post a Comment