ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 17 எலும்புக்குக் கேழ்வரகு கண்ணுக்கு தினை!

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 17 எலும்புக்குக் கேழ்வரகு கண்ணுக்கு தினை! ''என்ன பாட்டி இது..., கலர் கலரா தோசை பண்ணுவேனு ...

ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 17
எலும்புக்குக் கேழ்வரகு கண்ணுக்கு தினை!

''என்ன பாட்டி இது..., கலர் கலரா தோசை பண்ணுவேனு பார்த்தா, கருப்புக் கலர்ல இருக்கு, இதை எப்படிச் சாப்பிடுறது?'

''இது கம்பு சோள தோசை! அம்புட்டும் ஆரோக்கியம் பொண்ணு.'
''இப்படியே எதையாவது சொல்லிச் சாப்பிடவைச்சிடு.''
''ஆமாம்டி... அரிசியைக் காட்டிலும் கம்பு தானியத்தில் இரும்பும் கால்சியமும் பலமடங்கு அதிகம். நார்ச்சத்தும் இருக்கு. வைட்டமின், மினரல் டானிக்கும்கூட இருக்கு. பாட்டி சத்தானதாத்தான் தருவேன்னு உனக்குத் தெரியும்ல!'
''அது தெரியும். நீ கம்பு மட்டும் சொல்லலியே... கூட எதோ சோளமும் சொன்னியே?''

''சோளம் சேர்த்துச் செய்றப்ப, எண்ணெய் விடாமலேயே தோசை மொறுமொறுன்னு வரும். அதோட, சோளத்தில் உள்ள புரதம், சாதா தோசை
யவே ஊட்ட தோசையா மாத்திடும்.'

''நான்தான் அடிக்கடி பீச்ல சுட்ட சோளம் சாப்பிடறனே... .''

''அடியே அறிவாளி... அது மக்காச்சோளம். வெளிநாட்டுல இருந்து இங்க கொண்டுவந்து விக்கிறாங்க. நான் சொல்லுறது  வெள்ளைச் சிறு சோளம். இப்பல்லாம் யாரு அதைச் சாப்பிடறா?  மாட்டுத் தீவனத்துக்குதான் வாங்குறதே!''

''ஓ... அதுதான் எனக்குத் தோசை பண்ணிக் குடுத்திருக்கியா?''

''உன் நக்கல் இருக்கு பாரு... சோளம். கம்பு எல்லாமே உரம் இல்லாமல், பூச்சிக்
கொல்லி விஷம் இல்லாமல் விளையக்கூடியது. ஆர்கானிக்னு சொல்லி வாங்குறீங்கல்ல.. இதெல்லாம்தான் முழு ஆர்கானிக்.''

''சரி பாட்டி, டென்ஷன் ஆகாத. நான் சாப்பிடறேன். கம்பு, சோளத்தை தோசையா மட்டும்தான் சாப்பிடணுமா. வெரைட்டியா வேற எதுவும் பண்ண முடியாதா?''

''அதெல்லாம் அருமையாப் பண்ணலாம். சோளப் பணியாரமும், கம்பங்கூழும்தான் நாளைக்குக் காலையில உனக்கு டிபன். ஓகே வா.?''
''கூழா, சும்மா கேட்டா உடனே ஆப்பு வைக்கிற பாரு.'
''போன வாரம்  ஹோட்டல்ல, சாப்பிடறதுக்கு முன்னாடி சப்புக் கொட்டிக் குடிச்சியே, 'ஸ்வீட்கார்ன் சூப்’ அந்த இங்கிலீஷ் கூழ் இறங்கும்... தமிழ்க் கூழ் அலுக்குதாக்கும்?'
''வரிக்கு வரி என்னை அடிச்சா எப்படி? ரைட் விடு.. கூழுக்கு வடகம் பொரிச்சுத் தருவியா?'

''வடகம்லாம் கிடையாது. பிரண்டைத் துவையல்தான். எலும்புக்கு வலிமையான பிரண்டை, வயித்துப் புண்ணையும் போக்கும்.''

'ம்... எதோ டேஸ்ட்டியா குடுத்தா சரிதான்.''

''டேஸ்ட் இல்லாம எப்படி? பிரண்டையை வதக்கி கொஞ்சமாய் உப்பு, புளி, வரமிளகாய் சேர்த்து அரைச்சு கூழுக்கும், மோர்்சோறுக்கும் சாப்பிட்டுப்
பாரு. பிரண்டைக்கு ஃப்ரெண்ட் ஆயிடுவே.'

''எவ்ளோ நேரம் வெறும் தோசையை சாப்பிட? தொட்டுக்க எதாவது குடு பாட்டி.''

''இந்தா பக்கத்துலதான் கடலை சட்னி வைச்சிருக்கேன் பாரு. எடுத்துக்கோ...''
''ஓ இதானா? இதை எப்படிப் பண்றது பாட்டி?''

''நிலக்கடலையை வறுத்து புளி சேத்து, கொஞ்சம் தேங்காயும், வரமிளகாயும் வறுத்துச் சட்னியா அரைச்சுச் சாப்பிட்டா... அத்தனை டேஸ்ட். இந்தச் சட்னி மெலிஞ்ச உடலை பருக்க உதவும்.  சின்னப் பிள்ளைகளுக்கு நல்லது. 

 பிரண்டை, கடலை மாதிரியே வல்லாரை, தூதுவளை இதையெல்லாமும் வதக்கிச் சட்னியா செஞ்சு சாப்பிடலாம்.''

'சிறுதானியங்களிலே கம்பு, சோளம் தவிர வேற என்னல்லாம் காலை உணவுக்கு நல்லது பாட்டி?

'கேழ்வரகு தோசை, ரொட்டி, தினையரிசி வெண் பொங்கல் பண்ணலாம். கேழ்வரகு எலும்புக்கும் தினையரிசி கண்ணுக்கும் நல்லது. தினை மஞ்சளா இருக்கறதுக்குக் காரணம், அதுல இருக்கிற பீட்டா கரோட்டினால்தான். கூடவே பொங்கல்ல சேர்க்கிற மஞ்சளும், மிளகும் நோய் எதிர்ப்பாற்றலைத் தரக்கூடியது. சிறுதானியங்களை காலையில் சாப்பிடுறது, ரொம்ப நேரம் பசியைக் காக்கும். இட்லியையும், புட்டையும் வெள்ளை அரிசியில செய்யாம, பாலிஷ் போடாத சிறுதானியத்துல சாப்பிடணும்.  

''சரி என்ன கையில இஞ்சித் துண்டை வெச்சிருக்க?'
''காலையில் ரெண்டு துண்டு இஞ்சி, மத்தியானம் ரெண்டு ஸ்பூன் சுக்குத்தூள், சாயங்காலம் அரை டீஸ்பூன் கடுக்காய்த்தூள் தொடர்ந்து சாப்பிட்டா, மலச் சிக்கல் தொந்தரவு இருக்காது. நேரத்துக்குப் பசிக்கும். காலை பித்தக் கிறுகிறுப்பும் வராது. இளமையா, நோய் வராம இருக்கலாம்.'
''நீ கலக்கு பாட்டி!''

Related

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... 6080423647656967252

Post a Comment

3 comments

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு.
வாழ்த்துக்கள்.

Unknown said...

Thanks for sharing, Nice article @

New Latest Technology Tricks !!

www.techfetz.blogspot.com
http://techfetz.blogspot.com

* Mobile Tricks
* Computer Tricks
* Online Jobs
* Earn Money Online
* Latest Technology News
* Internet Tips

MohamedAli said...

தங்களின் வருகைக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து பெட்டகம் பார்த்து கருத்துக்களை தெரிவிக்கவும்.Thanks-அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item