அழகை அள்ளிக்கோங்க! டிப்ஸ் !! அழகு குறிப்புகள்!!!

அழகை அள்ளிக்கோங்க! டிப்ஸ் ஆ யிரம் கைகளால் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும், பெண்கள் 'இன்னும் கொஞ்சம்...’ எனக் கேட்பார்கள், அழகுக் கு...

அழகை அள்ளிக்கோங்க!
டிப்ஸ்
யிரம் கைகளால் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும், பெண்கள் 'இன்னும் கொஞ்சம்...’ எனக் கேட்பார்கள், அழகுக் குறிப்புகளை! இதோ, தலை முதல் பாதம் வரை பொலிவாக்கவல்ல பியூட்டி டிப்ஸை வழங்குகிறார், அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.

நெற்றிச் சுருக்கம், வயதான தோற்றம் தரும். இதைத் தவிர்க்க, தினமும் பாலாடை 2 டீஸ்பூன், வெள்ளரிக்காய் ஜூஸ் 1 டீஸ்பூன், தேன் 2 சொட்டு, ஆரஞ்சு ஜூஸ் ஒரு டீஸ்பூன் கலந்து, சுருக்கம் இருக்கும் இடத்தில் தடவி, அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்துவந்தால், சருமம் இயல்பு நிலைக்குத் திரும்புவதோடு, மேற்கொண்டு சுருக்கம் வராமலும் தவிர்க்கும்.

புருவம் அடர்த்தியாக வேண்டுமா... ஆலிவ் ஆயில், விளக் கெண்ணெய், கரி சலாங்கண்ணிச் சாறு இவற்றை தலா கால் டீஸ்பூன் எடுத்துக் கலந்து, புருவத்தில் தடவி, மசாஜ் செய்து வரலாம்.

மாதுளம் பழச்சாறு, பாலாடை தலா ஒரு டீஸ்பூன் கலந்து, இதழ் களில் தடவி மசாஜ் செய்து வந் தால், வசீகரிக்கும் பிங்க் நிற லிப்ஸ் உங்களுடைய தாகும்!

காய்ந்த கறிவேப்பிலை 100 கிராம் எடுத்து வெறும் வாணலியில் வறுக்கவும். பிறகு, ஒரு லிட்டர் ஆலிவ் ஆயிலை அதிலேயே ஊற்றிக் கொதிக்க வைக்கவும். பிறகு, ஆறவைத்து சேமிக்கவும். இதை வாரம் 2 அல்லது 3 தடவை தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்து வந்தால், முடி நன்கு வளர்வதுடன் கருமையாகவும் இருக்கும்.
சிலருக்கு மூக்கில் கரும்புள்ளிகள் தோன்றும். இந்த புள்ளிகளை நகத்தால் கிள்ளிப் பார்த்தால் முடி போல் இருக்கும். அவை முடிகளல்ல, அழுக்குகள். இப்படி அழுக்குக் காரணமாக வரும் கரும்புள்ளிகளைப் போக்க, சர்க்கரையை (ஜீனி) பவுடர் ஆக்கி, அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, விரலை நனைத்து, கரும் புள்ளிகள் இருக்கும் இடத்தில், தேய்த்து வர... கரும்புள்ளிகள் மறையும்.

பெரும்பாலும் காதுகளை யாரும் கவனிப்பதில்லை. காதின் பின்புறம் அழுக்கு சேர்ந்து அடை போல மாறிவிடும். இதைப் போக்க, கோலோனை ஒரு பஞ்சில் நனைத்து, காதின் பின்புறத்தை சுத்தம் செய்யலாம். காட்டன் பட்ஸ்களை கோலோனை நனைத்து, காது மடல்களை மேலாகச் சுத்தம் செய்யலாம்.

குங்குமப்பூ ஒரு கிராம் எடுத்து கசக்கி, 10 மில்லி பாதாம் ஆயிலில் கலந்து, லேசாக சூடாக்கி, கை, கால், கழுத்து, முகம் பகுதிகளில் தடவவேண்டும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு அல்லது கடலைமாவு 2 டீஸ்பூன் எடுத்து, அரை கப் தயிருடன் கலந்து, ஏற்கெனவே ஆயில் தடவிய இடத்திலேயே தடவி மசாஜ் செய்து, 5 நிமிடம் கழித்து கழுவினால், உடலும் முகமும் வசீகரிக்கும்.

தோலுடன் சீவப்பட்ட உருளைக்கிழங்கை அரைத்து ஜூஸ் எடுத்து, பஞ்சில் தொட்டு கண்களின் கீழ் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவவேண்டும். 5 நிமிடம் கழித்து வீட்டில் தயாரிக்கும் வெண்ணெயை எடுத்து நடுவிரலால் கருவளையங்களின் மீது தடவி மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் கருவளையம் காணாமல் போகும்.

Related

அழகி ஆகலாம்--அழகு குறிப்புகள்!

கண்: கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும். உதடு: உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம் மூன்றையும் கலந்து ...

எளிய அழகுக் குறிப்புகள்--அழகு குறிப்புகள்.

பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.  பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும். புள...

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க… முகம் பொலிவு பெற…! அழகு குறிப்புகள்.!

* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும். * பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் த...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 11:27:51 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,238

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item