அழகா இருங்க... அலர்ட்டா இருங்க! அழகு குறிப்புகள்!!

அழகா இருங்க... அலர்ட்டா இருங்க! டாக்டர் ஆர்.கீர்த்தனா இப்போது பெட்டிக்கடை முதல் மெகா மால் வரை அழகுப் பொருட்களின் அணிவகுப்புதான். நிற...

அழகா இருங்க... அலர்ட்டா இருங்க!
டாக்டர் ஆர்.கீர்த்தனா
இப்போது பெட்டிக்கடை முதல் மெகா மால் வரை அழகுப் பொருட்களின் அணிவகுப்புதான். நிறத்துக்கு சிகப்பழகு க்ரீம், பருவைப் போக்க ஆன்டிசெப்டிக் கிரீம், கரும்புள்ளி மறைய ஃபேஸ்பேக், முகம் கழுவ ஃபேஸ்வாஷ், வெயிலுக்கு சன்ஸ்கிரீன் என்று தலை முதல் கால் வரை  பயன்படுத்த ஆயிரக்கணக்கில் அழகு சாதனப் பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று பலருக்கும் குழப்பம் வேறு. ஆனால், அத்தனையும் ரசாயனங்கள் கலந்தவை என்பதால், அழகோடு ஆபத்தும் சேர்ந்து வரும் என்பதுதான் நம்மை அச்சுறுத்தும் உண்மை.

பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களில் சோடியம் லாரில் சல்பேட் Sodium Lauryl Sulfate (SLS)), தாலேட் (Phthalate), பாரபின் (Paraben)  மற்றும் ட்ரைக்ளோஸின் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன' என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த அக்குபங்க்சர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர் ஆர். கீர்த்தனா.

அழகு சாதனப் பொருட்களில் உள்ள ரசாயனம் மெதுவாக நம் சருமத்தினுள் ஊடுருவி, உடலின் வெவ்வேறு உறுப்புக்களில் பிரச்னையை உண்டாக்கும். கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் பிரச்னை அல்லது ஹார்மோன் சமச்சீரற்ற தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும்். ஆனால், நாம் வேறு ஏதோ காரணங்களால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என நினைப்போம். இந்த வகை நச்சுக்களால், புற்றுநோய்  வருவதற்கும்கூட வாய்ப்பு உள்ளது .
டியோடரன்ட் மற்றும் சிந்தெடிக் ஷாம்பூகளில் வாசனைக்காகச் சேர்க்கப்படும் தாலேட்ஸ், நகப்பூச்சுக்களில் சேர்க்கப்படும் பென்ஸீன் போன்றவை புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடியவை. உதட்டுச் சாயத்தில் சேர்க்கப்படும் ரசாயனம், சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும். சருமப் பராமரிப்புக்கான சாதனங்களில்  கிருமிகள் அண்டாமல் இருக்க சேர்க்கப்படும் ட்ரைகுளோஸின், தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும். அழகுப் பொருட்கள் அதிக நாட்கள் கெடாமல் பாதுகாக்க, பாரபின் சேர்க்கப்படுகிறது. இது, நம் உடலில் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடியது.

ஆன்ட்டி ஏஜிங் கிரீமைத் தடவும்போது, முகம் பொலிவாகத் தெரியும். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே முகத்தை வறண்டுபோகச் செய்துவிடும். கண்களில் போடும் மஸ்காராவினால் கண் எரிச்சல், கண் இமைகளின் முடி உதிர்தல் போன்றவையுடன், பாக்டீரியா தொற்றும் உண்டாக வாய்ப்பு உண்டு.

பல் மஞ்சளாக இருந்தால், அதற்கு பாலீஷ் போடுவதை விட்டுவிட்டு, பெருங்குடலைச் சுத்தம் செய்தால் போதும். 

கல்லீரல் சரியில்லை எனில், உணவில் இருக்கும் எண்ணெயைச் செரிக்க முடியாமல், சருமத்தின் வழியாக எண்ணெய் வெளியேறும். 

முகத்தை ஃபேஸ்வாஷ் போட்டுக் கழுவுவதைவிட, கல்லீரலைச் சரிசெய்தால் போதும். எண்ணெய் இல்லாத, சுலபமாகச் செரிக்கக்கூடிய உணவு
களைச் சாப்பிட வேண்டும். 

மேலும், முகத்தில் கரும்புள்ளிகள், கருவளையம் தோன்றுவதற்கும் நீரின் அளவு குறைவதே காரணம்.  சருமம் ஈரத்தன்மையுடன் இருக்க, மாய்ஸ்ச்சரைசர் க்ரீம் பயன்படுத்துவதைவிட, அடிக்கடி முகத்தில் தண்ணீரைத் தெளித்துக் கொள்ளலாம். 

மன உளைச்சலால் முகத்தில் சுருக்கம் வரலாம். அதற்கு, க்ரீம்களைத் தடவாமல், நட்ஸ் எடுத்துக்கொள்ளுதல், யோகா, பிராணாயாமம் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

இரவு 11 மணி  முதல் அதிகாலை 2 மணி வரையிலான நேரத்தில்தான், கல்லீரலும் பித்தப்பையும் நன்கு வேலை செய்து, உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். சரியான நேரத்தில் தூங்குவது அழகுக்கு அத்தியாவசியத் தேவை. 

இளம் வெயில் நம் மேல் பட்டால், பாக்டீரியா தொற்று மற்றும் பூஞ்சைத் தொற்று போன்றவை வராமல் காக்கலாம்.

 ஹார்மோன்கள் சமச்சீரின்மையால், பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்தல் போன்ற பிரச்னைகள் வரும். யோகப்பயிற்சிதான் இதற்கு சிறந்த தீர்வு.  வேக்ஸிங், திரெடிங் தேவையே இல்லை.
அடிக்கடி முகம் மலரச் சிரித்தால், முகத்தில் சீக்கிரம் சுருக்கங்கள் வராது. 

காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள்தான் அழகைக் கூட்டுகிறது என்பது பலரது அபிப்பிராயமாக இருக்கிறது. ஆனால், நம் உடல் ஆரோக்கியமாக இருந்தாலே போதும்... அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்கிற டாக்டர் கீர்த்தனா, 

செயற்கை அழகு சாதனப் பொருட்களுக்கான மாற்று அழகுப் பொருட்களையும் பட்டியல் இடுகிறார்.
அப்புறம் என்ன, அழகா இருங்க... அலர்ட்டா இருங்க!

மாற்று வழிகள்
 க்ளென்ஸர்: வறண்ட சருமத்துக்கு, பயத்த மாவுடன் தயிர் கலந்து முகத்தில் தடவி, சிறிதுநேரம் கழித்துக் கழுவலாம். எண்ணெய்ப் பசையுள்ள சருமத்துக்கு, கடலைமாவும் தயிரும் சேர்த்து உபயோகிக்கலாம். பழக்கூழை முகத்தில் தடவி வைத்திருந்து கழுவுவதால், முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடலாம். எலுமிச்சைச் சாறும் தேன், கஸ்தூரி மஞ்சள் கலந்த கலவையும் சருமத்தை சுத்தப்படுத்தக்கூடியவை.  

 டோனர்: குளிர்ந்த தண்ணீரே நல்ல டோனர். அடிக்கடி முகத்தில் தெளித்துக்கொள்ள வேண்டும். துவர்ப்புத்தன்மை உள்ள க்ரீன் டீ’ சாறில், தண்ணீர் கலந்து முகம் கழுவலாம். எண்ணெய்ப் பசை சருமத்துக்கு, ஃப்ரெஷ்ஷான வெள்ளரிக்காயைத் துருவி, தயிரில் போட்டுக் கலந்து முகத்தில் பேக் போட்டு வைத்திருந்து கழுவலாம்.

  ஃபவுண்டேஷன்: அரோரூட் மாவு, கொக்கோ பவுடர், லவங்க பவுடர்  தலா கால் டீஸ்பூன் எடுத்துக் குழைத்து, முகத்தில் போட்டுக்கொள்ளலாம்.

 ரூஜ்: கன்னங்கள் சிவப்பாக, செம்பருத்திப் பூவைக் காயவைத்து அல்லது பீட்ரூட் துருவலைக் காயவைத்துப் பொடித்து, அதை லேசாகத் தடவலாம்.

 லிப்ஸ்டிக்: பீட்ரூட் துருவிக் காயவைத்துப் பொடித்து, வெண்ணெயுடன் குழைத்து உதடுகளில் பூசினால், இயற்கை உதட்டுச் சாயம் பளபளக்கும்.

 ஐ லைனர், ஐ ஷேடோ: ஸ்பைருலினா (பச்சை நிறம்), கரிசலாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய் போன்றவை, கண்களின் மேலும், கீழும் அழகுசெய்யச் சிறந்தவை.

 சன்ஸ்கிரீன்: பாதாம் எண்ணெய், ராஸ்பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி விதை எண்ணெய்களில் எஸ்.பி.எஃப் (Sun protecting factor) உள்ளது. இந்த எண்ணெய்கள் கடைகளில் கிடைக்கின்றன. வெயிலில் செல்வதற்கு முன்பு, சருமத்தில் லேசாகத் தடவிக் கொள்ளலாம். நல்ல பலன் கிடைக்கும்.

  பருக்களைப் போக்க: இரவில் படுக்கும்போது, கற்பூரத்தில் துளி பன்னீர் சேர்த்துக் குழைத்து, பருக்களில் தொட்டு வைத்து, காலையில் கழுவி விடலாம்.

  வெயிலால் ஏற்படும் கருமையைக் குறைக்க: தக்காளி அல்லது உருளைக்கிழங்கு சாறை முகத்தில் தடவி வைத்திருந்து, குளிர்ந்த நீரில் கழுவினால், கருமை நீங்கிவிடும். 

தலைப்பை மாற்றவும். தலைப்பு : அழகுசாதனப் பொருட்கள் பின்னே, ஆபத்து வரும் முன்னே!

அகத்தின் அழகு முகத்தில்...
 பல், முடி:  உடலில் நீர்த்தன்மை இல்லாததைக் காட்டும்.
 நகம், கண்கள்:  கல்லீரல் ஆரோக்கியத்தைக் காட்டும்.
 சருமம், சரும முடி:  நுரையீரல் ஆரோக்கியம்.
 உதடுகள்:  மண்ணீரலின் ஆரோக்கியம்
 வாய், நாக்கு:  இதயத்தின் நலனைக் காட்டும் உறுப்புகள்.

Related

பொடுகுத் தொல்லையும் அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்:எளிய அழகுக் குறிப்புகள்!

பொடுகுத் தொல்லையும் அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்: தேங்காய்க் கீற்று - 2 வெள்ளைமிளகு - 1 டீஸ்பூன் இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்ட...

வீட்டிலேயே சீயக்காய் தயாரிப்பது பற்றி--அழகு குறிப்பு !

வீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும். சீயக்காய்- 1 கிலோ செம்பருத்திப்பூ- 50 பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல...

எளிய அழகுக் குறிப்புகள்!

பள பள அழகு தரும் பப்பாளி! பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இப்பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகி...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Thursday - Nov 28, 2024 12:30:10 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,379

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item