கலோரியை எரிக்க கயறு பயிற்சி! உடற்பயிற்சி!!
கலோரியை எரிக்க கயறு பயிற்சி! இ ன்றளவில், நம்மிடம் இருந்து தொலைந்துபோன ஒரு விளையாட்டு மற்றும் நாம் செய்ய மறந்த ஓர் உடற்பயிற்சி. அதுதா...

https://pettagum.blogspot.com/2014/03/blog-post_8258.html
கலோரியை எரிக்க கயறு பயிற்சி!
இன்றளவில்,
நம்மிடம் இருந்து தொலைந்துபோன ஒரு விளையாட்டு மற்றும் நாம் செய்ய மறந்த ஓர்
உடற்பயிற்சி. அதுதான் இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்பாத 'ஸ்கிப்பிங்’
என்னும் கயறு பயிற்சி.
இரண்டு கைகளிலும் கயற்றைப் பிடித்துக் கொண்டு தாண்டித் தாண்டிக் குதித்த காலம்
மலையேறிப்போய், ஜிம்மில் ஓடாத எந்திரத்தின் மீது ஒரே இடத்தில் நின்றபடி
ஓடிக்கொண்டிருக்கிறோம்.நம்மில் பலர் மறந்துபோன விளையாட்டாக இருந்தாலும்கூட,
அதன் நன்மைகள் நம்மை மலைக்க வைப்பதாக இருக்கும் என்கிறார், திருச்சியில்
ஃபிட்னெஸ் ஹெவனைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் பிரவீன்.
'ஜாகிங், ரன்னிங், சைக்கிளிங்கைவிட அற்புதமான
விளையாட்டு ஸ்கிப்பிங். விளையாட்டு மட்டுமல்ல; சிறந்த உடற்பயிற்சியும்கூட.
அந்தக் காலத்தில் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகச் செய்ததை, இன்றைக்கு
உடலுக்கு ஆரோக்கியமானது என்று தெரிந்தும்கூட பலரும் செய்யத்
தயங்குகின்றனர். ஸ்கிப்பிங் விளையாடுவதற்கான ஆர்வமும் குறைந்துகொண்டே
போகிறது.
ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்தால், 1,300 கலோரிகள் வரை
எரிக்க முடியும். ஸ்கிப்பிங் செய்வதால், நம் உடலில் உள்ள தசை, எலும்புப்
பகுதிகள், கை கால்கள் என முழு உடலுமே வேலை செய்கிறது. இதனால், நம் உடலில்
உள்ள ரத்த நாளங்களின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்க உதவுகிறது. நம் உடலின்
அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தத்தைக் கொண்டுபோகும் ஒரு செயலாக ஸ்கிப்பிங்
பயன்படுகிறது.
தோப்புக்கரணம் மற்றும் ஸ்கிப்பிங் செய்யும்போது
மட்டும்தான் இரண்டு கைளும், கால்களும் ஒரே நேரத்தில் வேலை செய்கின்றன.
இதனால், உடல் மட்டுமல்லாமல் மூளையிலும்கூட உடற்பயிற்சியின் தாக்கம்
ஏற்பட்டு, ஞாபக சக்தி அதிகரிக்கும்.
ஸ்கிப்பிங் பண்ணும்போது ரெண்டு கையையும்
சுழற்றுவதால், கைகளில் உள்ள தசைப்பகுதிகள், மணிக்கட்டு போன்றவை வலிமை
பெறும். ஜாகிங், உடற்பயிற்சி செய்யும்போது கழுத்துவலி, மூட்டுவலி ஏற்பட
வாய்ப்பு உண்டு. ஆனால், ஸ்கிப்பிங் செய்யும்போது இதுபோன்ற வலிகள் ஏற்பட
வாய்ப்பு இல்லை.
நடைப்பயிற்சியைப் போன்று இதற்கும் பெரிய செலவு
கிடையாது. ஒரு சின்னக் கயறு இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும்
ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம்' என்கிறார் பிரவீன்.
Post a Comment