கோமாரியை விரட்ட... 'மூலிகை டானிக்’! விவசாயக்குறிப்புக்கள்!!
கோமாரி நோய்க்கான மூலிகை வைத்திய முறைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், கடந்த டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விழுப்புரம் ம...

https://pettagum.blogspot.com/2014/01/blog-post_3763.html
கோமாரி
நோய்க்கான மூலிகை வைத்திய முறைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில்,
கடந்த டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டம், நடு
குப்பம் கிராமத்தில் மதுரை சேவா தொண்டு நிறுவனமும், பிச்சாண்டிக்குளம்
மூலிகைப் பண்ணையும் இணைந்து பயிற்சி ஒன்றை நடத்தின. முதல் நாள்
பயிற்சியில், தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக
ஆராய்ச்சி மற்றும் மரபுசார் மூலிகை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மற்றும்
பேராசிரியர் மருத்துவர் புண்ணியமூர்த்தி கலந்துகொண்டு, கால்நடைகளுக்கு
ஏற்படும் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி
எடுத்துரைத்தார்.
பயிற்சி பற்றிப் பேசிய மூலிகைப் பண்ணை ஒருங்கிணைப்பாளர்
பார்வதி, ''மாடுகளுக்கு எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுவதற்கான மசால்
உருண்டை, மூலிகை டானிக், புண்ணுக்கான மத்தன் தைலம், மடி நோய்க்கான
மருந்துகள் ஆகியவற்றைக் கொடுக்கிறோம். கடந்த முறை 'பசுமை விகடன்’ இதழோடு
இணைந்து நடத்திய பயிற்சியில் கலந்துகொண்ட பலரும் தங்களுடைய கால்நடைகளுக்கு
மூலிகை மருந்துகளைத்தான் பயன்படுத்துகின்றனர்'' என்றார்.
இதோ அந்த தயாரிப்பு முறை: சோற்றுக்கற்றாழை மடல்-5,
பச்சை மஞ்சள்-1 கிலோ, வெல்லம்-1 கிலோ, துளசி-3 கிலோ, வெள்ளைப் பூண்டு-அரை
கிலோ, தேங்காய்-5, உப்பு-இரண்டு கைப்பிடி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து,
தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டினால், 2 லிட்டர் மூலிகை டானிக் தயார்.
வளர்ந்த மாட்டுக்கு 200 மில்லி, கன்றுக்குட்டிக்கு 100 மில்லி, ஆட்டுக்கு
50 மில்லி என்ற அளவில் கொடுக்கலாம். நோய் தாக்கிய கால்நடைகளுக்கு
மாதத்துக்கு மூன்று முறை இம்மருந்தைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை
கொடுக்கும் போதும், காலை, மாலை என இரண்டு வேளையும் கொடுக்கவேண்டும்.
முக்கியக் குறிப்பு: இதைத் தயாரித்தால் ஒரு
வாரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். எனவே, உங்களிடம் இருக்கும்
கால்நடைகளின் அளவைப் பொறுத்து, டானிக் தயாரிக்கலாம்
Post a Comment