தேவையானவை பாஸ்மதி அரிசி (அ) பச்சரிசி - ஒரு கப் சின்ன வெங்காயம் - 20 பூண்டு - 4 - 5 பல் தக்காளி - 3 (அ) 4 காய்ந்த மிளகாய...
- தேவையானவை
- பாஸ்மதி அரிசி (அ) பச்சரிசி - ஒரு கப்
- சின்ன வெங்காயம் - 20
- பூண்டு - 4 - 5 பல்
- தக்காளி - 3 (அ) 4
- காய்ந்த மிளகாய் - 4 (அ) 5
- ஏலக்காய் - ஒன்று
- கிராம்பு - ஒன்று
- உப்பு - சுவைக்கேற்ப
- ரீஃபைண்ட் ஆயில் - 2 மேசைக்கரண்டி
- நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
அரிசியைக் களைந்து 20 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடித்து வைக்கவும்.
பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை தோலுரித்து வைக்கவும். தக்காளியைத் துண்டுகளாக
நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, ஏலக்காய் போட்டு பொரியவிட்டு, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.
நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ப்ரஷர் பானை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி, சூடானதும்
அரைத்த விழுதைப் போட்டு மிதமான தீயில் வைத்து கிளறவும். விழுது பாதி
அளவாகக் குறைந்ததும், அரிசியை சேர்க்கவும்.
வதங்கிய விழுதுடன் அரிசி ஒன்றாகச் சேரும்படி கிளறவும். பிறகு உப்பு
சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி ப்ரஷர் பானை மூடி 3 விசில் வரும் வரை
வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து
குழையாமல் கிளறிவிடவும்.
சுவையான வெங்காய பிரியாணி தயார்.
தமிழ் தினசரி ஒன்றில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வாசகி ஒருவர்
இந்தக் குறிப்பைக் கொடுத்திருந்தார். பிரியாணி மசாலா, கொத்தமல்லி, புதினா,
பட்டை இப்படி மசாலாப் பொருட்கள் எதுவும் இல்லாமல், சிம்பிளான முறையில்
செய்யக் கூடியதாக திகட்டாத சுவையில் இருந்தது இந்த பிரியாணி.
Post a Comment