பப்பாளி - இஞ்சி சூப் -- உடலுக்கு வலிவு தரும் சூப்கள்,
...
தேவையான பொருட்கள்வை:
பப்பாளி பழம்- சிறியது (பாதி),
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
வெங்காயம் - ஒன்று
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப்,
மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப,
நறுக்கிய கொத்தமல்லி தழை, கிரீம் - சிறிதளவு.
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
• வெங்காயம், பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• இஞ்சியை தோல் சீவி கொள்ளவும்.
• கடாயில் எண்ணெயை சூடாக்கி வெங்காயம், இஞ்சி, மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும்.
• ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீருடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி சூப் கப்பில் ஊற்றவும்.
• கடைசியாக அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.
Post a Comment