டென்ஷன் விஷயத்தில் நீங்கள் எப்படி? --- உபயோகமான தகவல்கள்,

'டெ ன்ஷன்’ - இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. அந்த அளவுக்கு வீட்டிலும், வெளியிலும், எங்கேயும், ...

'டென்ஷன்’ - இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. அந்த அளவுக்கு வீட்டிலும், வெளியிலும், எங்கேயும், எப்போதும் டென்ஷனும் நம்முடனே பயணிக்கிறது. டென்ஷனாக இருக்கும்போது, வேலையில் ஈடுபாடின்மை, நம்பிக்கையின்மை, தன்னம்பிக்கைக் குறைதல், தூக்கப் பிரச்னை என மன அழுத்தத்துக்கான அறிகுறிகளும் ஆரம்பமாகிவிடுகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு, கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதிலை மனதுக்குள் 'டிக்’ செய்துகொள்ளுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர், உங்களுக்கு சிகிச்சை தேவையா என்பதை உங்கள் பதில்களே கூறும். 
1. எந்த ஒரு காரியத்தையும் விருப்பமின்றி செய்தீர்களா?
அ. ஆம், முழு ஈடுபாட்டுடன் செய்தேன்
ஆ. ஒரு சில நாட்கள் மட்டும் (1 முதல் 3 நாட்கள்)
இ. கிட்டத்தட்ட பாதிநாட்கள் (4 முதல் 7 நாட்கள்)
ஈ. பெரும்பான்மையான நாட்கள் விருப்பமின்றிச் செய்தேன் (8 முதல் 14 நாட்கள்.)
2. மனம் தளர்ந்து, சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்களா?
அ. இல்லை.
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது.
இ. பாதி நாட்கள் அப்படித்தான்.
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்.
3. தூங்குவதில் சிரமம் அல்லது போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறீர்களா?
அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படித்தான்
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்
(ஒரு நாளைக்கு எந்தவிதத் தடங்கலும் இன்றி குறைந்தது எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்)
4. சோர்வாகவோ அல்லது குறைந்த ஆற்றலுடன் இருப்பதுபோலவோ உணர்கிறீர்களா?
அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படித்தான்
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்
5. பசியின்மை அல்லது அதிகமாகச் சாப்பிடுதல் பிரச்னை உள்ளதா?
அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படித்தான்
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்
6. தோல்வியுற்ற, தன்னைத்தானே வெறுக்கின்ற உணர்வு ஏற்பட்டதா?
அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படி ஏற்பட்டது
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்
7. செய்தித்தாள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற சின்னஞ்சிறு விஷயங்களில்கூட சரியாகக் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதா?
அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படி இருந்தது
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்
8. மற்றவர்கள் கவனிக்கும் அளவுக்கு மிக மெதுவாகப் பேசுகிறீர்களா? வேலை செய்கிறீர்களா? அல்லது அளவுக்கு அதிகமாகப் பரபரப்புடன் இருக்கிறீர்களா?
அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
இ. பாதி நாட்கள் அப்படித்தான் நடந்துகொண்டேன்
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்
9. வாழ்க்கையை வெறுத்து தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் மனநிலை ஏற்பட்டதா?
அ. இல்லை
ஆ. சில தினங்கள் அப்படித் தோன்றியது
இ. பாதி நாட்கள் அப்படி இருந்தது
ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்
(உங்களையே வெறுத்துக்கொள்ளும், காயப்படுத்திக்கொள்ளும் அல்லது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஒருநாள் ஏற்பட்டிருந்தால்கூட, அது மிகவும் ஆபத்தானது.)
(அ- 0, ஆ-1, இ-2, ஈ-3 மதிப்பெண்கள்)
மதிப்பெண் 0 - மனஅழுத்தம் இல்லாதவர் நீங்கள். இந்த நிலையைத் தக்கவைத்துக்கொண்டால், நீங்கள்தான் மகிழ்ச்சியான நபர்.
1 முதல் 4 வரை - மிகக் குறைந்த மனச்சோர்வு. மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய பயிற்சிகள் செய்யுங்கள். யோகா, தியானம், உடற்பயிற்சிகள் உங்கள் மனச்சோர்வை நீக்கப் பயன்படும்.
5 முதல் 14 வரை - மனச்சோர்வு. மன அழுத்தம் என்பது எல்லோருக்கும் தோன்றுவதுதான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். எனவே, மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.
15 முதல் 19 வரை - சற்றே அதிகமான மனச்சோர்வு.
20 முதல் 27 வரை - அதிகமான மனச்சோர்வு- நீங்கள் உங்களையே காயப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு மனநிலை கொண்டவராக இருப்பதால் மனநல மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்.

Related

உபயோகமான தகவல்கள் 3472141123821801310

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item