ஜவ்வரிசி அடை --- சமையல் குறிப்புகள்,
ஜவ்வரிசி அடை தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், பொட்டுக்கடலை - அரை கப் (மாவாக அரைக்கவும்), அரிசி மாவு, கேரட் துருவல் - தலா அரை கப், நறுக்...
https://pettagum.blogspot.com/2013/02/blog-post_558.html
ஜவ்வரிசி அடை
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப்,
பொட்டுக்கடலை - அரை கப் (மாவாக அரைக்கவும்), அரிசி மாவு, கேரட் துருவல் -
தலா அரை கப், நறுக்கிய வெங்காயம் - 4, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை
மிளகாய் - தேவையான அளவு, தேங்காய் துருவல், நெய் - தலா கால் கப், உப்பு -
தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை முதல்
நாள் ஊற வைத்து, மறுநாள் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மற்ற எல்லா
பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் விடாமல் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை
தோசைக்கல்லில் அடை போல மெல்லியதாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு
பொன்னிறமாக எடுக்கவும்.
இதை வெல்லம் அல்லது ஏதாவது ஒரு சட்னியுடன் சாப்பிடலாம்.
Post a Comment