அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)---ஹெல்த் ஸ்பெஷல்,

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்) சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். அழகு என்பது எல்லோருக்கும் ரொம்பப்...

அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)

சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். அழகு என்பது எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்ச விஷயம். நம்ம எல்லாரும் அதுக்காக எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறோம்கறது தெருவுக்கு தெரு இருக்கும் அழகு நிலையங்களைப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் எல்லாருக்கும் அழகு நிலையங்களுக்கு அடிக்கடி விசிட் செய்ய முடியாது. பட்ஜெட், நேரம் எல்லாம் இடிக்கும். அதனால், தினசரி வீட்டிலிருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இரவு உறங்கச் செல்லுமுன் குறைந்தது ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினால் போதுமானது. பாதம் : நாள்தோறும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு சோர்வா வருவீங்க இல்லையா, வந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் நல்ல நறுமணமுள்ள குளியல் உப்பை (bath salts) வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, உங்கள் பாதங்களை அதில் ஒரு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். சும்மா இருப்பது போரடித்தால், நல்ல ஸ்க்ரப்பர் (scrubber) கொண்டு குதிகாலைத் தேய்க்கலாம். ஆரஞ்சு ஸ்டிக் கொண்டு கால் நகங்களில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றலாம். பின்னர் கால்களை தண்ணீர் அல்லது சோப்பால் நன்கு கழுவிவிட்டு, ‘கோல்ட் (cold cream) க்ரீம்அல்லது மாய்ச்சுரைசர்போட வேண்டும். இதனால் உங்கள் பாதங்கள் மிருதுவாகவும் பளிச்சென்றும் இருக்கும். முகம் : இரவு உறங்கச் செல்லுமுன் நாள் முழுதும் முகத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்றுவது முக்கியமான வேலையாகும். எண்ணைப் பசையுள்ள சருமத்தை வால்நட் ஸ்க்ரப்கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான பேபி ஆயில்கொண்டும் துடைக்கலாம். அவ்வாறு துடைக்கும் போது உங்கள் கைகளின் அசைவு வட்ட வாக்கில் இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட்டு தரமான நைட் க்ரீம்களை உபயோகப்படுத்தவேண்டும். எளிதானமாய்ஸ்ச்சுரைசரும்உபயோகப்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த மாய்ஸ்ச்சுரைசரைமுகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்குக் கீழேயும் உபயோகிக்கலாம். தலைமுடி : இரவில் எண்ணைய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் முடிக்குக் கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். (தலையணை எண்ணையாவதற்கு நான் பொறுப்பல்ல!!!) ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே, ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணையை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணைய்) எடுத்துக் கொண்டு சூடுபடுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். கால்களைப் பராமரிக்க அமரும் அந்த நேரத்தில் இதையும் செய்து முடித்தால் உங்கள் நேரம் மிச்சமாகும். கண்கள் : சிலருக்கு புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு விளக்கெண்ணையை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும். சோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட் , வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு (குளிர் சாதனப் பெட்டியிலிருந்து முன்னதாக வெளியில் எடுத்து வைத்திருக்க வேண்டும்.) போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ, அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கருவளையங்கள் மறையும். உதடுகள் : தினமும் சிறிதளவு வேசலின்’ (Vaseline) எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும். இரவு உறங்கச் செல்லுமுன் நாள் முழுதும் முகத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்றுவது முக்கியமான வேலையாகும். எண்ணைப் பசையுள்ள சருமத்தை வால்நட் ஸ்க்ரப்கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான பேபி ஆயில்கொண்டும் துடைக்கலாம். அவ்வாறு துடைக்கும் போது உங்கள் கைகளின் அசைவு வட்ட வாக்கில் இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட்டு தரமான நைட் க்ரீம்களை உபயோகப்படுத்தவேண்டும். எளிதானமாய்ஸ்ச்சுரைசரும்உபயோகப்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த மாய்ஸ்ச்சுரைசரைமுகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்குக் கீழேயும் உபயோகிக்கலாம். அனைத்தும் எல்லா வகையினருக்கும் பொருந்தும்.


Related

ஹெல்த் ஸ்பெஷல் 421193761332341635

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item