தேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்

தேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எ...

  • தேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்சல், இருதயத்தில் ஏற்படும் வலி,பலவீனம் ஆகியவற்றை போக்கும்.
  • குடலில் ஏற்படும் புண்களை(அல்சர்) ஆற்றும். கல்லீரலில் ஏற்படும் நோய்களை போக்கும்.
  • தேனைக்குறைந்த அளவு அருந்தினால் மலச்சிக்கலை போக்கும். அதிக அளவு அருந்தினால் மலச்சிக்கலை உண்டு பண்ணும்.
  • பேதியை நிறுத்தும்.ரத்தசோகையை போக்கும்(இந்திய பெண்கள் 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள் இந்த ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்),நரம்புகளுக்கு வலிமையை தரும். நீர்க்கோவையை சரி செய்யும். சிறுநீர்க்கழிவை குறைக்கும்.
  • தோல் சம்பந்தமான நோய்கயை போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். கிருமி,நாசினியாக வேலை செய்யும்.பற்கள்,கண்கள் ஆகியவற்றுக்கு பலம் தரும். தொண்டையில் ஏற்படும் தொற்றுநோய்,வலியை குறைக்கும்.
  • உடல்குண்டானவர்களை மெலிய செய்யும்.உடலுக்கு ஊட்டச்சத்து தரும்.சுவாச காச நோய்களை குணமாக்கும். விக்கல் நோயை போக்கும்.
  • உடலில் விஷம் இருந்தால் முறிக்கும். சூலரோகங்களை போக்கும்.உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக இயங்க செய்யும். நீண்ட ஆயுளை தரும். பெண்களின் கருப்பையில் இருக்கும் நோய்களை குணப்படுத்தும். குழந்தைகளை ஊட்டத்துடன் வளர்க்க பயன்படும்.
சரி..தேனை குளிர்ந்த நீருடன் கலந்து பருகினால் அதன் நோய்தீர்க்கும் குணம் மாறும்.அதை பார்க்கலாம்.
  • தேனுடன் குளிர்ந்த நீரை கலந்து அருந்தினால்(மண்பாணை தண்ணீர் சிறப்பு) அருந்தினால் உடலின் ஊளைச்சதை குறையும்.களைப்பு உடனே நீங்கும்.
  • தேனுடன் காய்ச்சிய பசும்பாலை கலந்து அருந்தினால் உடல் வலிமை அடையும்.தாதுவிருத்தி ஏற்படும்.
  • ஆட்டின் பாலை வடிகட்டி தேனுடன் அருந்தினால் உடலுக்கு தேவையான ரத்தத்தை ஊறச்செய்யும்.
  • ரோஜா இதழ்கள் கல்கண்டு,தேன் ஆகியவற்றை கலந்து தயாரிக்கும் குல்கந்தை சாப்பிட்டால் உடலின் சூடுதணிந்து உடல் குளிர்ச்சியடையும்.
  • 100 மிலி பசுவின் பாலையும், 100 மிலி தண்ணீரையும் கலந்து இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் உடலில் மறைந்திருக்கும் நோய்க்காரணங்கள் மறைந்து போகும்.
  • காய்ந்த திராட்சை பழங்களை தேனில் ஊறவைக்க வேண்டும். ஊறியவுடன் காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் உடல் அழகு பெறும்.
  • ஒரு கோழி முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ஒரு தேக்கரண்டி தேன்கலந்து அருந்தி விட்டு உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் களைப்பு அடையாது. வலிமை அதிகரிக்கும்.
  • அருகம்புல்லை தட்டி கசாயம் எடுத்து தேனைக்கலந்து அருந்தினால் பல நோய்களை குணமாக்கும். களைப்பு என்பதே இருக்காது.
  • கணைச்சூட்டினால் குழந்தைகள் மெலிந்து காணப்படுவார்கள். குழந்தையின் பெற்றோருக்கு பல டாக்டர்களிடம் காட்டியும் ' என்ன சாப்பிட்டாலும் குழந்தை தேறமாட்டேன்கிறதே..' என்பார்கள். இந்த குழந்தைகளுக்கு தினசரி ஆட்டுப்பாலில் இரண்டு சொட்டு தேனை கலந்து கொடுத்தால் கணைச்சூடு நீங்கி குழந்தை அழகு போட்டியில் இடம் பெறும் அளவு குண்டாகிவிடும்.
  • இளநீரில் தேன் கலந்து அருந்தினால் உடல் சூடு சட்டென்று தணிந்து போகும்.
  • அத்திப்பழங்களை 48 நாட்களுக்கு தேனில் ஊறவைத்து(இது சர்வோதாய சங்கங்களில் கிடைக்கும்) தினசரி ஒன்றிரண்டு சாப்பிட்டால் உடல் வலிவு பெறும்.
  • மஞ்சள் காமாலை உள்பட காமாலைநோய் கண்டவர்கள் தினமும் தேன் சாப்பிட்டால் காமலை குறைவதுடன் பின்விளைவுகளும் இருக்காது.
  • இஞ்சியை இடித்து சாறு எடுத்து சிறிது நேரம் வைத்திருந்து அது நன்றாக தெளியும். இந்த தெளிந்த சாறில் தேன் கலந்து அருந்தி வந்தால் வயிற்று செரிமானம் சரியாகும். உண்ட உணவு உடனே செரித்து விடும். எங்காவது ருசியாக இருக்கிறதே என்று கண்டதையும் சாப்பிடுபவர்கள் உடனே இதை செய்தால் சீரணம் உடனே உறுதி.

பெண்களின் முக அழகுக்கு தேன் வெள்ளைக் கோதுமை மாவு ஒரு கரண்டி அதனுடன் தேன் கலந்து சில துளிகள் பன்னீரையும் விட்டு நன்றாக பிசைந்து, பின்பு இன்னும் பன்னீர் விட்டு கொஞ்சம் பிசைந்து முகத்தில் சிறிது நேரம் பூசி வைத்திருக்கவும். அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி முகத்தை பருத்தி துணியால் ஒற்றி எடுக்க வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை எளிதான இந்த முறையை செய்து வர உங்களின் முகம் "கார்னியர் நேச்சுரல்,பேர் அன்ட் லவ்லி,வீகோடர்மரிக்' எல்லாவற்றையும் தோற்கடிப்பது உறுதி. பிறகு உங்கள் முகம் 'விண்ணாடிக்கீழ்க்கடலில் விரிந்து வரும் பரிதியிலே கண்ணாடி ஏரியென கதிர்சாய்க்கும் வட்டமுகம்' ஆக மாறி விடும்.பிறகென்ன....எல்லாம் நலமே! பழனிக்கு போகும் உங்கள் நண்பரை மறக்காமல் பஞ்சாமிர்தம் வாங்கி வரச்சொல்லுங்கள். காரணம், முழுக்க முழுக்க தேனுடன் வாழைப்பழமும், பேரீச்சை,நாட்டுச்சர்க்கரை,கல்கண்டு,ஏலக்காய்.சுக்கு( சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை.சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளுமில்லை) கலந்து இருப்பதால் அது நிச்சயம் ஒன்று அல்ல ஐந்து அமிர்தங்களின் தேன் கலந்து கலவை. குழந்தைகளுக்கு தினமும் சாப்பாட்டில் முட்டை போட முடிவெடுத்துள்ளது அரசு. இது தவறானது என்பது என்னுடைய கருத்து. காரணம், முட்டையிலுள்ள சால்மொனல்லா உள்பட சில பாக்டீரியாக்கள் எல்லோருக்கும் நன்மை செய்வதில்லை. இதற்கு பதிலாக தேனை தரலாம். 35 மிலி தேனில் இரண்டு முட்டைகளின் சத்தும்,ஒரு கிலோ அளவுக்கு மஞ்சள் முள்ளஙகியின் சத்தும் இருப்பதாக ஆய்வுகளில் நிருபிக்கப்பட்டுள்ளது -படித்தில் பிடித்தது


Related

ஹெல்த் ஸ்பெஷல் 4075016377782977705

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item