இறால் கபாப்--சமையல் குறிப்பு
இறால் கபாப் தேவையானவை இறால் - 1/2 கிலோ கடலை மாவு - 1/2 ஆழாக்கு அரிசி மாவு - 1 கையளவு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 ட...

https://pettagum.blogspot.com/2011/08/blog-post_7892.html
இறால் கபாப்
தேவையானவை
இறால் - 1/2 கிலோ
கடலை மாவு - 1/2 ஆழாக்கு
அரிசி மாவு - 1 கையளவு
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - பொரிப்பதற்கு
ஆப்ப சோடா - 1 சிட்டிகை
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை
* இறாலை தோல், குடல் நீக்கி சுத்தம் செய்யவும்.
* கடலை மாவு, அரிசி மாவு, ஆப்ப சோடா, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள்தூள், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
* இந்தக் கலவையில் சுத்தம் செய்த இறாலை முக்கி மாவில் தோய்த்து காய வைத்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
* இதற்குத் தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
*************************************************************************
Post a Comment