ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருள்கள் பல உள்ளன. அவற்றை அறிவோம்.!

ஒ ரு பொருளைப் பதப்படுத்தி, பாதுகாத்து நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஃப்ரிட்ஜ். ஆனால், காய்கறிகள், பழங்க...

ரு பொருளைப் பதப்படுத்தி, பாதுகாத்து நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஃப்ரிட்ஜ். ஆனால், காய்கறிகள், பழங்கள், சாக்லேட், பீட்சா என எல்லாவற்றையுமே ஃப்ரிட்ஜுக்குள் அடக்கிவிடுகிறோம். ஃப்ரிட்ஜுக்குள் இடமிருக்கிறது என்பதற்காக இருக்கும் பொருள்களையெல்லாம் அடுக்கிவிடுவது நல்லதல்ல. பலருக்கு இதுபற்றிய விழிப்பு உணர்வு இருப்பதில்லை. பொருள்களை எத்தனை நாள்கள் வைத்திருக்கலாம் என்பதை அறியாமல் அந்தப் பொருளையும் கெடுத்து, உடல்நலனையும் பாழாக்கிக் கொள்கிறோம். ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருள்கள் பல உள்ளன. அவற்றை அறிவோம்.
பச்சை மிளகாய்


பச்சை மிளகாயை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. ஃப்ரிட்ஜினுடைய அதிக குளிரானது மிளகாயை அழுகச் செய்துவிடும். சாதாரண சூழலில் வெளியில் வைப்பதே போதுமானது.
பூண்டு

பூண்டை ஃப்ரிட்ஜில் வைத் தால் சுவை குறைந்துவிடும். பூண்டையும் பச்சை மிளகாய் போலவே வெளியில் வைத்தாலே போதும்.
வெங்காயம்

வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால் அழுகிய நாற்றம் ஏற்படும். அதி்லுள்ள ஃபோலிக் ஆசிட், குவர்சிட்டின் சத்துகளும் குறைந்துவிடும். வெங்காயத்தை வெளியே வைத்திருந்தாலே போதும். வெங்காயம் உலர்ந்தாலும் அதன் சுவையும் சத்துகளும் மாறாமல் இருக்கும்.
பரங்கிக்காய், சுரைக்காய்

பரங்கிக்காய், சுரைக்காய் வகை களையும் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. அதன் இயற்கையான நீர்ச்சத்து மாறி, சுவையும் கெட்டுவிடும்.
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்குகளை ஃப்ரிட்ஜில் வைப்பதால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படலாம். இதனால் காற்றோட்ட முள்ள இடங்களில் உருளைக்கிழங்கு களை வைக்க லாம். ஃப்ரிட்ஜில் வைப்பதால் அதனுடைய சுவை குறைந்து விடும்.
தர்பூசணி, முலாம்பழம்


தர்பூசணி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்களை வெளியில் வைத்தாலே போதும். ஒருவேளை நறுக்கினால், இரண்டு நாள்கள் மட்டும் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம். அதற்கு மேல் அப்பழங்கள் நீர்த்தன்மையை இழந்துவிடும்.
சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகை பழங்களையும் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. சாதாரண வெப்பநிலையே இந்தப் பழங்களைப் பழுக்கச் செய்துவிடும். ஃப்ரிட்ஜில் வைப்பதால் அப்பழங் களின் தோல் பாதித்து, பளபளப்பும் மங்கிவிடும்.
மூலிகைகள், கீரைகள்

மூலிகைகள், கீரைகள், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அவற்றின் சத்துகள் குறையும். நீர் நிறைந்த பாத்திரத்தில் இவற்றின் தண்டுப்பகுதியை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்திருந்தாலே போதும். உலர்ந்து போகாமல் இருக்கும்.
பழங்கள்

எந்தப் பழத்தையும் நறுக்கிய பின்னர் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் வாயு பழங்களின் மீது படரும். இது உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும். பழங்களில் கிருமிகளின் தாக்கம் ஏற்படும். தேவையானபோது பழத்தை நறுக்கி உண்பதே நல்லது.
வாழைப்பழம்

ஃப்ரிட்ஜில் இருந்து வெளியாகும் வாயுவானது அதிகப்படியான குளிரில் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுத்துவிடும். பழமும் அழுகிவிடும். காற்றோட்டமுள்ள இடத்தில் வாழைப் பழத்தை வைத்திருப்பதே நல்லது.
தக்காளி

அதிக குளிர், தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கக் கூடியது. காற்றுப்புகக் கூடிய சாதாரண சூழலிலேயே தக்காளி சில நாள்கள் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைக்கும் தக்காளியின் சுவை குறையும்.
உலர்பழங்கள்

திராட்சை, அத்தி, பேரீச்சம் போன்ற உலர்பழங்களையும் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. உலர்ந்த பழங்கள் அதன் உலர்ந்த தன்மைக்காகத்தான் விரும்பப் படுகின்றன. அந்தத் தன்மையை ஃப்ரிட்ஜ் கெடுத்துவிடும்.
பெர்ரி வகைப் பழங்கள்

சாதாரண தட்பவெப்ப நிலையே பெர்ரி வகைப் பழங்களுக்குப் போதுமானது. ஃப்ரிட்ஜில் வைக்கும்போது இப் பழங்களின் சுவை கெட்டு விடும்.

Related

சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் 4377660194787418160

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item