கம்ப்யூட்டர் சார்ந்தது .....கண் பாதுகாப்பு வழிகள்!

♣ ★ கண் பாதுகாப்பு வழிகள் ★ நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க...

★ கண் பாதுகாப்பு வழிகள் ★
நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனாலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப் படுகின்றன.

1. கம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. ஒளி அமைப்பு: அறையில் ஒளி அமைப்பு நம் கண்களுக்கு பலவகையில் சோதனைகளைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும்.

நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி புரிவீர்கள் என்று கூறவும். இப்போது இந்த மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியினை வடிவமைப்பார்கள்.

3. 20:20:20 விதி: மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணி புரிந்து கொண்டிருந்தால், அதிக பட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்கு புத்துணர்வைத் தரும்.

பொதுவாக ஒரு நிமிடத்தில் நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறை தான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.

ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயாமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

3. இதமான சூடு தேவை: கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

4. தண்ணீர் கொண்டு அடித்தல்: இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

5. தேயிலை பைகள்: பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட நனைக்கப்பட்ட துணியை, அலுவலகத்திற்குச் செல்கையில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும். பின்னர், அங்கிருந்து வந்தவுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்கவும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.

6. வைட்டமின்கள்: ஊட்டச் சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும்.
கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடவும்...!.😍

Related

ஹெல்த் ஸ்பெஷல் 3563425508028787909

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item