வரிக் கணக்கை வியாபாரிகள் ஏன் தாக்கல் செய்ய வேண்டும்?

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட். த மிழகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி, பல லட்சம் / கோடி மக்கள...

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

மிழகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி, பல லட்சம் / கோடி மக்கள் பலவிதமான சிறு தொழில்களைச் செய்துவருகிறார்கள். காலம் காலமாக இந்தத் தொழில்களில் ரொக்கமாகத்தான் பணத்தைப் பரிமாற்றம் செய்து வருகிறார்கள். சிறு தொழில் செய்பவர்கள் பலரும் ரொக்கமாக வியாபாரம் செய்துவந்ததால், வரி வரம்புக்குள் வராமல் மகிழ்ச்சியாக தங்கள் தொழிலைச் செய்து வந்தார்கள். தவிர, பல வியாபாரிகள் தினமும் தாங்கள் வியாபாரம் செய்த பணத்தை தங்கள் கைகளால் எண்ணிப் பார்த்து அளவற்ற ஆனந்தம் அடைவார்கள். சில வியாபாரிகள், ஒரு நாளில் பல தடவை தங்களது கல்லாப்பெட்டியைத் திறந்து பணத்தை எண்ணிக்கொள்வார்கள்!

இவற்றில் எல்லாம் எந்தத் தவறும் இல்லை. தொழில் செய்வதே பணம் சம்பாதிக்கத்தான் என்கிறபோது, சம்பாதிக்கும் பணத்தைத் தொட்டு, ரசித்துப் பார்ப்பதில் தவறே இல்லை.  சொல்லப் போனால், பணத்தை ரொக்கமாகப் பயன்படுத்துவது தான் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் செளகரிய மாக இருக்கிறது.

ஆனால், கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இருந்த இந்தியா இப்போது இல்லை.  நமது மத்திய அரசாங்கம், கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்று ரொக்கத்தில் நடக்கும் வியாபாரத்தை முடிந்த அளவுக்குக்  குறைப்பதாகும்.ரூ.20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடனாகவோ அல்லது சன்மானமாகவோ தரக்கூடாது என்கிற சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணப் பரிமாற்றம் செய்யவே கூடாது என மத்திய அரசாங்கம்,  இந்த ஆண்டு பட்ஜெட்டில் புதிய நடைமுறையைக் கொண்டு வந்திருக்கிறது. 

 ஆக, சிறு தொழில் செய்யும் வியாபாரிகள் பணத்தை ரொக்கமாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு மத்திய  அரசாங்கம் ஒரு பக்கத்திலிருந்து அழுத்தம் தந்துவருகிறது. மற்றொரு பக்கம், இளம் வாடிக்கையாளர்கள்
கேஷ்லெஸ்ஸாகத்தான் பரிவர்த்தனை செய்வோம் என்று சொல்லி வருகிறார்கள். ஆன்லைன் மூலம் அல்லது இ-வேலட் மூலம் அல்லது கிரெடிட்/ டெபிட் கார்டுகள் மூலம் தங்களது பர்ச்சேஸ்களை முடித்துக் கொள்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். 

ஆக, பணமில்லா பரிவர்த்தனையை சில ஆண்டுகள் வேண்டுமானால் ஒத்திப் போடலாமே தவிர, அதனை வியாபாரிகள் முழுவதுமாகத் தவிர்த்துவிட முடியாது. இந்த நிலையில், சிறு வியாபாரிகள் கேஷ்லெஸ் பரிவர்த்தனையை ஏன் தவிர்த்து வருகிறார்கள் என்பது முக்கியமானக் கேள்வி.

இதற்கு பல காரணங்கள் உண்டு. கூடுதல் கட்டணச் செலவு, பொருள் விற்ற பணம் காலம் தாழ்த்திக் கிடைப்பது, விற்பனை வரி, வருமான வரி போன்ற வரிப் பிரச்னைகள் ஏதேனும் வந்துவிடுமோ என்கிற அச்சம் போன்றவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லலாம். இந்த நான்கு காரணங்களில் வியாபாரிகளை அதிகமாக அச்சுறுத்துவது வருமான வரித் தாக்கல் செய்யவேண்டும் என்பதே.

ஏனெனில், கூடுதல் கட்டணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இந்தியா மற்றும் உலகமே ஆன்லைன் பரிவர்த்தனை போன்ற கேஷ்லெஸ் பொருளாதாரத்துக்கு மாறும்போது, நாம் மட்டும் தனித்து நிற்க முடியாது. அதற்காக நீங்கள் செய்யும் சிறு செலவினை செய்துதான், உங்கள்  வியாபாரத்தை நீங்கள் வளர்த்தெடுக்கவேண்டும்.

காலம் தாழ்த்தி, அதாவது சில தினங்கள் கழித்து, பணம் கிடைப்பது கிரெடிட் கார்டு போன்றவற்றின் மூலம் பரிவர்த்தனை செய்யும்போது நிகழும் ஒன்றுதான். அதற்காக நீங்கள் உங்களது வொர்க்கிங் கேப்பிட்டலை அதிகப்படுத்த வேண்டிவரும். அல்லது நீங்கள் உங்கள் சப்ளையரிடம் கடனுக்குப் பொருளைத் தரச் சொல்லலாம். அல்லது  உங்கள் நிலைமையை எடுத்துச் சொல்லி, உங்கள் வங்கியில் ஓவர் டிராஃப்ட் தரச் சொல்லலாம்.
விற்பனை வரி ஏய்ப்பை ஒருவர் நீண்ட நாட்களுக்குத் தொடர முடியாது. ஜிஎஸ்டி அறிமுகமானவுடன் இதுபோன்ற ஏய்ப்புக்கள் வெகுவாகக் குறைந்துவிடும். விற்பனை வரியை ஈடுசெய்ய உங்களின் வியாபார உத்தியை மாற்றுவதன் மூலம் சமாளித்துவிட முடியும்.

விற்பனை முழுவதையும் கணக்கில் கொண்டு வந்தால் வருமான வரி கட்டவேண்டி வருமே என்கிற சந்தேகம்தான் பலரையும் பணத்தை ரொக்கமாக பரிமாற்றம் செய்யத் தூண்டுகிறது. இந்த சந்தேகம் முற்றிலும் தவறானது. இன்று இருக்கும் பல சிறு தொழில்களில் கணவன், மனைவி, மகன், மகள் என குடும்பமே உழைத்து வருகிறது. இதுதவிர, தொழிலுக்காக நீங்கள் பல செலவுகள் செய்கிறீர்கள். அந்தச் செலவு அனைத்தையும் தொழில் செலவுக் கணக்கில் கொண்டு வரமுடியும்.

பெரும்பாலான சிறு தொழில்கள் வருடத்துக்கு ரூ.50 லட்சம் வரை லாபம் சம்பாதிக்கலாம். இந்தத் தொகையை நீங்கள் கணக்கில் காண்பிக்காமல் எடுத்துச் செல்லும்போது, முழுத்தொகையும் கறுப்புப் பணமாகிவிடுகிறது. அதற்குப் பதிலாக, நீங்கள் பணமில்லா பரிவர்த்தனையை ஏற்றுக் கொள்ளும்போது, உங்களது வியாபாரம் மற்றும் லாபம் பெருக வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலை  நீங்களும் உங்கள் மனைவி, மகன், மகள் என நால்வரும் சேர்ந்து ஆரம்பித்த ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனம் என்று எடுத்துக் கொள்வோம்.  மேலும், இந்த ரூ.50 லட்சம் லாபத்தை, குடும்பத்திலிருந்து தொழிலில் பார்ட்னர்களாக உழைக்கும் நீங்கள் நால்வரும், ஒவ்வொருவருக்கும் தலா ஆண்டுக்கு ரூ.12.50 லட்சம் சம்பளமாக எடுத்துக்கொண்டால், உங்கள் தொழிலுக்கு பெரிதாக வரி ஏதும் செலுத்தவேண்டி இருக்காது. அதே சமயத்தில் நீங்கள் நால்வரும் குறைவான வருமான வரியையே செலுத்த வேண்டி இருக்கும். அதாவது, உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் சம்பளத்தில் கிட்டத்தட்ட 11 - 12% வரிதான் கட்டவேண்டி வரும்.

அது மட்டுமல்ல, நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து வருவீர்கள் எனில், அதை வைத்துக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தொழில் கடன் போன்றவற்றைப் பெறலாம். உங்கள் வருமானத்தை மறைத்து முதலீடு செய்யாமல், எந்த முதலீடு அதிக வருமானம் தருமோ, அந்த முதலீட்டைத் தேர்வுசெய்து  முதலீடு செய்யலாம். சமூகத்தில் வருமான வரி கட்டும் ஒரு அந்தஸ்த்தும் உங்களுக்குக் கிடைக்கும்.  வருமான வரித் துறையிலிருந்து உங்களுக்கு நோட்டீஸ் வருவதும் குறையும். பயமில்லாமல்  கார் வாங்கலாம். வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்று வரலாம். கிரெடிட் கார்டில் வேண்டியதை செலவு செய்யலாம். டீமேட் கணக்கு திறந்துகொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளலாம். எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் வங்கியில் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.

கறுப்புப் பணம் வைத்திருந்த அனைவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் என்ன நடந்தது? இரவோடு இரவாக 30% அதிக விலை தந்து தங்கத்தை வாங்கினார்கள். அல்லது 30% - 50% விலை கொடுத்து ரூபாய் நோட்டுக்களை மாற்றினார்கள். ரெகுலராக 11 - 12% வரி கட்ட அஞ்சியவர்கள், மொத்தமாக யாரோ ஒருவரிடம் 30% விலை கொடுத்தார்கள். அரசாங்கத்தின் உச்சபட்ச வரியே அதுதான்.  அது மட்டுமல்ல, கமிஷன் கொடுத்து பணத்தை மாற்றியபிறகும், அந்தப் பணம் கறுப்புப் பணம்தான். சொந்தக்காரர்களிடம் சென்று, உங்கள் அக்கவுன்டில் ரூ.1 அல்லது ரூ.2 லட்சம் போட்டு மாற்றித் தருகிறீர்களா என்று கெஞ்சி கைகட்டி நின்ற காட்சியை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த நிலை தேவைதானா என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

சரியாக வரி செலுத்தி நிம்மதியாக பிசினஸ் செய்வது லாபமா அல்லது வரி கட்டாமல், பயந்து பயந்து பிசினஸ் செய்வது லாபமா என்பதை ஒரு சிறிய உதாரணத்துடன் பார்ப்போம். 20 வருடங்களுக்கு முன்பு உங்களிடம் ரூ.10 லட்சம் இருந்தது. அன்றைய தினத்தில் உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் இருந்தன.

ஆப்ஷன் 1 : உச்சபட்ச வருமான வரியான 30 சதவிகிதத்தைச் செலுத்திவிட்டு, நீங்கள் விருப்பப் பட்டவாறு, மீதியுள்ள ரூ.7 லட்சத்தை முதலீடு செய்துகொள்ளலாம்.

ஆப்ஷன் 2 : வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வைத்திருந்து, மொத்த ரூ.10 லட்சத்தையும் நீங்கள் தங்கத்திலோ அல்லது நிலத்திலோ முதலீடு செய்து கொள்ளலாம். (பெரும்பாலான கறுப்புப் பணம் இந்த இரண்டில்தான் செல்கிறது).
சந்தேகமே இல்லாமல், பெரும்பாலான சிறு தொழில் செய்பவர்கள்  இரண்டாவது ஆப்ஷனையே தேர்வு செய்திருப்பார்கள். ஆனால், ஆப்ஷன் 1-ல் தான் நீங்கள் அதிகமான பணத்தைச் சம்பாதித்து இருப்பீர்கள். எப்படி என்று கேட்கிறீர்களா?

அன்றைய தினத்தில் ஆப்ஷன் 1-ல் உங்களுக்கு கிடைத்த ரூ.7 லட்சத்தை உங்கள் விருப்பப் படி முதலீடு செய்திருக்கலாம். சாதாரண மனிதர்கள், நீண்ட நாட்களுக்கு தேவைப் படாத பணத்தை எதில் முதலீடு செய்வார் கள்? எதில் அதிக வருமானம் கிடைக்குமோ, அதில்தான் முதலீடு செய்வார்கள்.  எதில் அதிக வருமானம் கிடைக்கும்? நீண்ட நாட்களுக்கு முதலீடு செய்யும்போது, முதலில் பங்குச் சார்ந்த முதலீடு, இரண்டா வதாக ரியல் எஸ்டேட், மூன்றாவதாக பாண்டுகள், நான்காவதாக தங்கம் என்கிற ஆர்டரில்தான் அதிக வருமானம் கிடைக்கும்.

ஆக, பங்கு சார்ந்த முதலீடுகள்தான் நீண்ட நாட்களில் உலகளவில் அதிகமான வருமானத்தைத் தந்துள்ளன. இனிமேலும் கொடுக்கும். அதற்குப் பிறகுதான் ரியல் எஸ்டேட், பாண்டுகள், தங்கம் எல்லாம் வருகின்றன. ஆப்ஷன் 1-ஐ தேர்ந்தெடுத்தவர் அன்றைய வரிக்குப் பிந்தைய லாபமான ரூ.7 லட்சத்தை அதிக கண்காணிப்புத் தேவைப் படாத பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தார் என்று வைத்துக்கொள்வோம். கடந்த 20 வருடங்களில் நடப்பிலிருந்த அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளும் சராசரியாக 17.92% (ஜனவரி 08, 2017) கூட்டு வட்டியில் வருமானம் தந்துள்ளன. நல்ல ஃபண்டுகள் 24% கூட்டு வட்டியில் வருமானம் தந்துள்ளன. சராசரியாக எடுத்துக்கொண்டால், நீங்கள் அன்று முதலீடு செய்த ரூ.7 லட்சம், இன்றைய தினத்தில் ரூ.1,89,16,790-ஆக இருக்கும். சிறப்பாகச் செயல்படும் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால், அந்த ரூ.7 லட்சத்தின் தற்போதைய மதிப்பு ரூ.5,17,04,905 ஆகும். இந்தப் பணம் முழுக்க முழுக்க வெள்ளைப் பணம். மேலும், இதற்கு வருமானம் வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை.

ஆனால், ஆப்ஷன் 2-ஐத் தேர்வு செய்து நீங்கள் தங்கத்தில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அதன் இன்றைய மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் ஆகும். (அன்றைய விலை கிராம் சுமார் ரூ.500 ஆகும்; இன்றைய விலை கிராம் சுமார் ரூ.3,000 ஆகும்). இன்று விற்பனை செய்தால் சட்டப்படி வரி கட்டியாக வேண்டும். மேலும், அந்தத் தங்கம் இதுவரை, உங்கள் பேலன்ஸ்ஷீட்டில் ஏறாத சொத்தாகவே இருக்கும். இதேதான் ரியல் எஸ்டேட்டுக்கும். ஒவ்வொரு ஊரிலும் ஒரு விலை சொல்வார்கள். நீங்கள் சரியான விலைக்குத்தான் சொத்தினை விற்கிறீர்களா என்பதே உங்களுக்குத் தெரியாது. அப்படி இருக்கும்போது அன்றைய ரூ.10 லட்சம் முதலீட்டின் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்பதைத் துல்லியமாக உங்களால் கணக்கிட முடியாது.   அப்படியே விற்றாலும் வரி கட்டவேண்டும்.

வரித் தாக்கல் ஏன் அவசியம் என்று இப்போது உங்களுக்குப் புரியும். நீங்கள் உங்கள் பணத்தைக் கணக்கில் கொண்டுவந்து, நீங்கள் விரும்பியபடி, அதிக வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்!குறுகிய காலத்தில் ஸ்மார்ட்டாக இருப்பதைவிட,  நீண்ட காலத்தில் ஸ்மார்ட்டாக இருப்பதே புத்திசாலித்தனம்!

Related

வரிச் சேமிப்பு... கூடுதல் வழிகள்!

வருமான வரியைச் செலுத்தி முடிக்கும் நேரம் இது. வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின், ரூ.1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகள் முழுவதையும் நீங்கள் பயன்படுத்திவிட்டீர்களா? ‘யெஸ்’ எனில், உங்களுக்கான அடுத்த ...

வரியைச் சேமிக்கும் 30 வழிகள்..!

வரியைச் சேமிக்கும் 30 வழிகள்..! சேனா சரவணன் நம்மில் பலருக்கு எந்த முதலீட்டுக்கு அல்லது எந்தச் செலவுக்கு எவ்வளவு வருமான வரிச் சலுகை கிடைக்கும் என்கிற விவரம் தெரியாமலே இருக்கிறது. இதனால்...

இறுக்கிப் பிடிக்கும் வருமான வரித் துறை... கிடுக்கிப் பிடியைத் தவிர்க்கும் வழிகள்!

இறுக்கிப் பிடிக்கும் வருமான வரித் துறை... கிடுக்கிப் பிடியைத் தவிர்க்கும் வழிகள்! ‘வருமானத்தைக் குறைத்துக் காண்பிப்பதும், வரிச் சலுகைகளை அதிகரித்துக்கொள்வதுமான தவறுகளைச் செய்து வம்பில் மாட்டிக...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Jan 7, 2025 8:22:1 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item