மனச்சோர்வை விரட்ட 6 வழிகள்!

ம னச்சோர்வுக்குக் காரணங்களைத் தேடினாலே சோர்வு வந்துவிடும். அந்த அளவுக்குக் காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தற்போது, பெரும்பாலானோர் மன...


னச்சோர்வுக்குக் காரணங்களைத் தேடினாலே சோர்வு வந்துவிடும். அந்த அளவுக்குக் காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தற்போது, பெரும்பாலானோர் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு, அதனுடனேயே  வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வை எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது, மனச்சோர்விலிருந்து எப்படி விடுபடுவது என்பதற்கான எளிய வழிகளைப் பற்றிப் பார்க்கலாம்.

நிறைவான தூக்கம்

மண்டையை உடைக்கும் மனஉளைச்சலைச் சமாளிக்க, தெளிவான மனம் வேண்டும். அதற்கு நிறைவான தூக்கம் அவசியம். தூங்காமல் இருந்து அல்லது சரியாகத் தூங்காமல் பிரச்னை குறித்துச் சிந்தித்துக்கொண்டே இருந்தால், மனநோயாளியாக மாறும் வாய்ப்பு அதிகம். தூங்கும் முன் பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பதை அவசியம் தவிர்த்து விடுங்கள்.

ஒரு பயிற்சியை உங்களுக்கு எனத் தேர்வு செய்யுங்கள்

நீச்சலோ, ஏரோபிக்ஸோ உங்களுக்கான ஒரு பயிற்சியைத் தேர்ந்தெடுத்து, அதில் அரை மணி நேரம் முழு மனதோடு செலவழிக்க வேண்டும். அந்த அரை மணி நேரத்தில், நீங்கள் வேறு... உங்களது பிரச்னைகள் வேறு என்பதை மனதுக்குப் புரியவைத்துவிடுங்கள்.

நம்பிக்கை மனிதர்களைப் படியுங்கள்

நாளிதழ், பத்திரிகை, இணையம் என எல்லா இடங்களிலும் நம்பிக்கை மனிதர்களைப் பார்க்க முடியும். அவர்களின் கதையைப் படியுங்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். உங்களுக்கான வழிகளும் பிறக்கும். நம்பிக்கை வாசகங்களைத் தேடிப் பிடித்துப் படியுங்கள். நம்பிக்கை தரும் பாடல்களை அடிக்கடி கேளுங்கள்.

சரியான நேரத்துக்கு வேலையை முடித்துவிட்டுக் கிளம்புங்கள்

வேலைதான் எல்லாமுமே என்ற எண்ணத்தை மாற்றுங்கள். வேலையும் உங்களுக்கு ஒரு வேலை எனப் புரிந்துகொண்டு, வேலையை மிகச் சரியாக, சரியான நேரத்துக்கு முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள். கசப்பான உணர்வுகளை  அலுவலக வாசலில் புதைத்துவிட்டுச் செல்வது நல்லது.

பிடித்த உறவுகளுடன் சில நிமிடங்கள்


நண்பர், அம்மா, அப்பா, பாட்டி, செல்லப் பிராணி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்... அவர்களுக்கு என நேரம் ஒதுக்கி, அவர்களுடன் செலவழியுங்கள். சிலருக்கு ஷாப்பிங் பிடிக்கும், அவர்கள் மனச்சோர்விலிருந்து தப்பிக்க அடிக்கடி ‘விண்டோ ஷாப்பிங்' செய்யலாம்.

உண்ணும் உணவைக் கவனியுங்கள்


போதுமான காய்கறி, பழங்கள், சிறுதானியங்கள், தானியங்கள், பருப்பு-பயறு வகைகள், நிறைவான கொழுப்புச்சத்து உள்ள உணவுகள் போன்ற அனைத்தும் சரியான அளவில் தினசரி உண்ண வேண்டும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 1026923970811599600

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item