ஹெல்த்தியா இருக்க கை தட்டுங்கள்!

கிளாப்பிங் தெரப்பி ந ம் அபிமான கிரிக்கெட் வீரர் சிக்ஸ் அடிக்கும்போது, மிகப்பெரிய விஷயத்தை ஒருவர் செய்யும்போது அவரைப் பாராட்ட, நம்மு...

கிளாப்பிங் தெரப்பி


ம் அபிமான கிரிக்கெட் வீரர் சிக்ஸ் அடிக்கும்போது, மிகப்பெரிய விஷயத்தை ஒருவர் செய்யும்போது அவரைப் பாராட்ட, நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த கை தட்டுவோம். சாதாரணமான விஷயம் என்று நினைக்கும் கைதட்டுதலில் நினைத்துக்கூட பார்க்க முடியத அளவுக்கு பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. கை தட்டுவது ஒரு யோகப் பயிற்சிக்கு இணையானது. தினமும் கைதட்டும் பயிற்சி செய்துவந்தால், மருந்துகளால்கூட ஏற்படுத்த முடியாத நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.

கை தட்டுவதன் நற்பலன்கள்

நம் கைகளில் 39 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. கைகளைத் தட்டும்போது ஏற்படும் உராய்வினால் வெப்பம் ஏற்பட்டு, உள்ளங்கையில் இருக்கும் ரிசப்டார்கள் தூண்டப்படுகின்றன.  இதனால், ‘சுஜோக்’ சிகிச்சை முறையில் கிளாப்பிங் தெரப்பியைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, கைப் பள்ளதாக்குப் புள்ளி (Hand valley point), கட்டைவிரல் அடிப்புள்ளி (Base of thumb piont), மணிக்கட்டுப்புள்ளி (Wrist Point), கட்டை விரல் நகப்புள்ளி (Thumb nail point) ஆகிய முக்கியமான புள்ளிகள் நன்கு தூண்டப்பட்டு பலன்கள் கிடைக்கின்றன.

*ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் பிரச்னைகள் கட்டுக்குள் வருகின்றன. நுரையீரல் வலுப்பெறும்.

*கழுத்துவலி, முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி சரியாகும்.

*ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்.

*செரிமானத்தை மேம்படுத்துகிறது.

*நினைவாற்றலை மேம்படுத்துகிறது. கவனத்திறனைக் கூர்மையாக்குகிறது.

*நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

*தினமும் அரை மணி நேரம் கை தட்டுவதால், சர்க்கரை நோய், ஆர்த்ரைட்டிஸ், தலைவலி, இன்சோம்னியா எனும் உறக்கமின்மைப் பிரச்னை, கண் பிரச்னை ஆகியவை நீங்கும்.

*எப்போதும் ஏ.சி-யிலேயே இருப்பவர்கள், வியர்வை சுரப்புக் குறைவாக உள்ளவர்கள் கிளாப்பிங் தெரப்பி செய்வதால், ரத்த ஓட்டம் மேம்பட்டு, ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

*மூளையின் நியூரோடிரான்ஸ்மீட்டர்கள் தூண்டப்பட்டு, செரட்டோனின் சுரப்பு மேம்படும். இதனால், மூளை சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் செயல்படுகிறது.

*உற்சாகம் குறைவாக, சோர்வாக இருக்கும் நேரத்தில் கை தட்டினால், அது நம் மனநிலையை மாற்றி உற்சாகப்படுத்தும்.

*ரத்த ஓட்டம் மேம்படுவதால், சிறுநீரகத்தின் செயல்பாடுகள் இயல்பாகும்.

*குழந்தைகளுக்குக் கை தட்டுவதைக் கற்றுத் தருவதால், அவர்களின் ‘ஃபைன் மோட்டார்’ திறமைகள் எனப்படும் எழுதுவது, ஓவியம் வரைவது போன்ற திறன்கள் மேம்படும்.

*கை தட்டுவதைப் பற்றிய ஒரு சூப்பர் மேட்டர்தானே இது! உற்சாகமாகக்் கை தட்டுங்க; ஆரோக்கியத்தை உங்கள் வசமாக்குங்க!


கிளாப்பிங் தெரப்பி எப்படி செய்வது?

தினமும் காலையில் உள்ளங்கையில், விரல்களில் தேங்காய் எண்ணெயைத் தேய்த்துக்கொண்டு, இரண்டு உள்ளங்கைகளும் விரல்களும் ஒன்றன்மீது ஒன்று படுமாறு ஒரே சீரான வேகத்தில் 20 - 30 நிமிடங்கள் கை தட்ட வேண்டும். மிக அழுத்தமாகவோ பட்டும் படாமலோ தட்டக் கூடாது. இயல்பான அழுத்தத்தில், சற்று தளர்வாகக் கைகளை வைத்துக்கொண்டு தட்ட வேண்டும். கைகளில் தேங்காய் எண்ணெய் தடவியிருப்பதால், கைகளில் உள்ள நுண்துவாரங்களில் எண்ணெய் இறங்கி, கை தட்டுவதன் பலனை உடலுக்குள் கொண்டு செல்லும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 8653099452010111085

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item