பல் பராமரிப்பு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

பல் பராமரிப்பு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்! ப ல்... அழகு மற்றும் ஆரோக்கியக் காரணி! அதைப் பாதுகாத்...

பல் பராமரிப்பு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ல்... அழகு மற்றும் ஆரோக்கியக் காரணி! அதைப் பாதுகாத்துக்கொள்வதில் எழும் சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார், பல் மருத்துவத்தில் 53 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, சென்னை தி.நகரைச் சேர்ந்த ‘ஜே.ஜி.ஹெச்.ஆர் டோட்டல் டென்டல் கேர்’ மருத்துவமனையின் மருத்துவர், டாக்டர் ஜானகிராமன்.
“காலை, இரவு இரு நேரங்களிலும் பல்துலக்க வலியுறுத்தப்படுவதன் காரணம் என்ன?’’
“பல் சொத்தையைத் தவிர்க்கவே அவ்வாறு வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் சாப்பிடும் உணவுப் பொருட்கள் பற்களுக்கு இடையே ஒட்டிக்கொள்ளும். மேலும், உணவுப்பொருட்களில் உள்ள சுக்ரோஸை (இனிப்பு) பாக்டீரியாக்கள் சாப்பிட்ட பின்னர், லாக்டிக் அமிலத்தை பல், ஈறுகளின் மீது வெளியிடும்போது, அது ஒரு வெண்படலம் போன்று உருமாறும். அந்தப் படலம் தொடர்ந்து படியும்போது, காரையாக (Plaque) மாறி, பல் அரிப்பு ஏற்பட்டு பல்லானது சொத்தையாகும்.”
“பல் துலக்கும்போது ரத்தம் வரக் காரணம்?’’
“பற்களின் காரையை கவனிக்காமல் விட்டால், ஈறுகள் பலவீனம் அடைந்துவிடும். அதனால் பல் துலக்கும்போது, ஈறுகளில் ரத்தம் வரும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிலருக்கும், பல் துலக்கும்போது ரத்தம் வரும். பற்களில் ரத்தம் வந்தால், ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுக வேண்டும். பொதுவாக, ஆண்டுக்கு ஒரு முறையாவது பல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.’’
“குழந்தைகளுக்குப் பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..?’’
“குழந்தைகள் வாயை திறந்துகொண்டே தூங்குவது, விரல் சூப்பிக்கொண்டே தூங்குவது, அடிக்கடி நாக்கு மற்றும் பென்சிலைக் கடித்துக்கொண்டே இருப்பது... இதெல்லாம் தவறு. இவ்வாறு செய்வதால் பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும் சமயத்தில் பற்கள் கோணலாகவும், சீரற்ற முறையிலும் வளர ஆரம்பிக்கும். பொதுவாக, குழந்தைகளுக்கு 7 - 12 வயதில் பால் பற்கள் விழுந்து, நிரந்தர பற்கள் முளைக்கும் சமயத்தில் குழந்தைகளின் பற்களை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். 12 வயதுவரை பற்கள் விழாமல் இருந்தால், கட்டாயம் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும்.”
“சூடான, குளிர்ச்சியான, கடினமான உணவுப் பொருட்களால் பற்களுக்கு ஏற்படும் பாதிப்பு..?”
“ஆரோக்கியமான பற்கள் குளிர்ச்சியான, சூடான, கடினமான பொருட்களை ஏற்றுக்கொள்ளும். சொல்லப்போனால் கடினமான உணவுகளை மென்று சாப்பிட பற்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்கும்போது, அதன் வலிமை உறுதிபடும். அதனால்தான் கரும்பு சாப்பிடுவது பற்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி வலியுறுத்தப்படுகிறது. சொத்தைப் பல் மற்றும் பல் ஈறுகளில் பாதிப்பு உடையவர்கள் குளிர்ச்சியான, சூடான பொருட்களைச் சாப்பிடும்போதுதான், பல் வலி மற்றும் பல் கூச்சம் ஏற்படும். அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.”
“புகையிலைப் பொருட்கள், பற்களின் ஆரோக்கியத்தை பாழாக்குவது பற்றி?’’
‘‘தொடர்ந்து புகையிலைப் பொருட்களை பயன்படுத்து வதால், பற்களின் ஈறுகள் பாக்டீரியாக்களால் அரிக்கப்பட்டு, பல் சொத்தை, பல் வலி, பற்களில் கறை போன்ற பாதிப்புகள் ஏற்படும். மேலும், வாயினுள்ளே தொடர்ந்து புகையிலைப் பொருட்களை அடைத்து வைத்திருப்பதால் ‘ஓரல் கேன்சர்’ பாதிப்புக்கும் வாய்ப்பிருக்கிறது. புகையிலைப் பொருட்களை பயன்படுத்திய பின்னர், வாயை சுத்தம் செய்ய வேண்டும். படிப்படியாக புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதே நல்ல தீர்வு.’’
‘‘சூயிங்கம் மெல்வது நல்லதா?’’
‘‘சூயிங்கம் மெல்லும்போது பற்களுக்குத் தொடர்ந்து வேலை கொடுக்கப்படுவதுடன், உமிழ்நீரும் சுரந்து கொண்டே இருப்பதால் பற்களுக்கு வலிமையைத் தரும். எனவே, சூயிங்கம் மெல்வது பற்களுக்கு ஆரோக்கியமானதே.”
“குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுப்ப தால் பல் பிரச்னை வருமா..?’’
“கண்டிப்பாக வரும். புட்டிப்பால் கொடுக்கும் பெரும்பாலான அம்மாக்கள், இரவு நேரங்களில் பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்கின்றனர். இதனால், குழந்தையின் பற்களில் பால் படிந்துவிடுகிறது. வாயில் எப்போதுமே இருக்கும் ‘ஸ்டிரெப்டோ காகஸ்’ (strepto coccus) பாக்டீரியா, பற்களில் படிந்திருக்கும் பாலுடன் வினைபுரிந்து பற்சொத்தையை ஏற்படுத்தும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் இத்தகைய பற்சொத்தை, ‘நர்ஸிங் பாட்டில் கேரீஸ்’ (Nursing bottle caries) எனப்படும். அம்மாக்கள், புட்டிகளின் மூலம் குழந்தைக்குப் பால் கொடுத்தவுடன், கவனமாக குழந்தையின் பல் மற்றும் நாக்குப் பகுதியை சுத்தம் செய்துவிட வேண்டும். அக்கால வழக்கத்தைப்போல சங்கு (பாலாடை) மூலமாக குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதே சிறந்த முறை.’’
“சீரற்ற பல் வரிசையை சரிசெய்ய கிளிப் அணியும்போது, கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?”
“பற்களின் வரிசையை சீர்செய்ய, ‘ரிமூவபிள்’ மற்றும் ‘ஃபிக்ஸட்’ என இரண்டு வகையான கிளிப்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிறுவர்களுக்கு, ரிமூவபிள் வகை கிளிப்களைப் பயன்படுத்தலாம். விலை குறைவாக இருப்பதுடன் குறுகிய நாட்களிலேயே பற்களின் வரிசையை சீர் செய்துவிடலாம். 20 வயதுக்கு மேல் பல் வரிசையை சீர் செய்ய நினைத்தால், அதிகம் செலவாகும். மேலும், ‘ஃபிக்ஸட்’ வகை கிளிப்களைமட்டுமே அணிய முடியும்.’’

Related

ஹெல்த் ஸ்பெஷல் 8684704831777195351

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item