சொரசொரப்பு... கருமை... காணாமல் போக எளிய வழிகள்!

பெ ண்கள் வெளியே பேசத் தயங்கும் விஷயங்களில் ஒன்று, அக்குள் குறித்த சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகள். ஸீ த்ரூ ஸ்லீவ்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆ...

பெண்கள் வெளியே பேசத் தயங்கும் விஷயங்களில் ஒன்று, அக்குள் குறித்த சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகள். ஸீ த்ரூ ஸ்லீவ்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆடைகள் அணியும் பெண்களுக்கு மட்டுமல்ல, இது ஆரோக்கியம் வேண்டும் அனைத்துப் பெண்களும் கவனம்கொடுக்க வேண்டிய விஷயமும்கூட. அக்குள் பகுதியில் படரும் கருமை மற்றும் சொரசொரப்பை நீக்க எளிமையான தீர்வுகளைச் சொல்கிறார், ஈரோட்டில் உள்ள மஹா ஹெர்பல் பியூட்டி பார்லரின் பியூட்டிஷியன் மகேஸ்வரி.

அக்குளின் கருமை நீங்க...

அண்டர் ஆர்ம்ஸைப் பொறுத்தவரை, பொதுவாக வீட்டில் ஷேவ் செய்வதைவிட பார்லரில் வேக்ஸிங் செய்துகொள்வது சிறந்தது.

அக்குளின் கருமை நிறத்தை ஸ்பெஷல் டேன் ப்ளீச் செய்துவிட்டு பின்னர் வேக்ஸிங் செய்வதன் மூலம் நீக்கலாம். ஒவ்வொரு முறை வேக்ஸிங் செய்யும்போதும் கூடவே ஹெர்பல் ப்ளீச் செய்துகொண்டால் ஒவ்வாமை பிரச்னை ஏற்படாது.

இரவில் உறங்கச் செல்வதற்கு முன் அக்குள் பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவி வர, சில நாட்களில் கருமை நிறம் மாறும்.

குளித்து முடித்த பிறகு, எலுமிச்சைச் சாற்றுடன் தயிர் அல்லது பன்னீர் சேர்த்து...  பஞ்சு அல்லது காட்டன் துணியில் தொட்டு அக்குள் பகுதியை ஸ்கிரப் செய்வதுபோல துடைத்து வர, நாளடைவில் கருமை நீங்கி பளிச்சிடும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்யலாம்

கசகசாவை பால் அல்லது தயிரில் ஊறவைத்து அரைத்து, அந்த பேஸ்ட்டை அக்குள் பகுதியில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவிவர, நாளடைவில் கருமை நீங்கும்.

வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து, அதை அக்குள் பகுதியில் தடவி, 10 - 15 நிமிடங்கள் காயவிட்டு கழுவிவர, அந்த இடம் குளிர்ச்சி பெறுவதோடு இயற்கை ப்ளீச் ஆகவும் அமையும்.

3 ஸ்பூன் தயிர், 5 சொட்டு எலுமிச்சைச் சாறு, அரை ஸ்பூன் சர்க்கரை என்கிற விகிதத்தில் ஸ்கிரப் தயாரித்து, அதை அக்குள் பகுதியில் மசாஜ் செய்வதுபோல ஸ்கிரப் செய்துவர, நாளடைவில் பளிச் என ஆகும். 

தரமான டியோடரன்ட்டாகப் பயன்படுத்துவது முக்கியம். ஆனாலும் அதை நேரடியாக அக்குளில் படும்படி அல்லாமல், ஆடையிலேயே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, அக்குள் கருமையாக இருக்கும் பிரச்னை உள்ளவர்கள் இதைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

அக்குளில் வியர்வை, துர்நாற்றம் பிரச்னை அதிகம் உள்ளவர்கள், கைகள் இறுக்கமாக இருக்கும் ஆடைகள் தவிர்த்து தளர்வாக உடுத்தவும்.

உடல் சூடு, அதிக எடை போன்றவையும் அக்குள் பகுதியில் கருமை படரக் காரணமாகலாம். எனவே, இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கவும்.

சொரசொரப்பு நீங்க...


ஆரஞ்சுப் பழத்தின் தோலை காயவைத்து அரைத்து, அதோடு தக்காளிச் சாறு சேர்த்துக் கலந்து, அந்த பேஸ்ட்டை அக்குளில் தடவி 10 - 15 நிமிடங்கள் காயவிட்டுக் கழுவி வர, சொரசொரப்பு நீங்கி மிருவாகும்.

அக்குள் பகுதியில் பாதாம் எண்ணெயால் ஐந்து நிமிடங்கள் தினமும் மசாஜ் செய்துவந்தாலும், சொரசொரப்பு நீங்கும்.

உருளைக்கிழங்கு மற்றும் ஆப்பிள், கறுப்பாக, சொரசொரப்பாக இருக்கும் அக்குள் பகுதிகளுக்கு புத்துணர்வு தரவல்லவை. உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அதை அக்குளில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதேபோல ஆப்பிள் சாற்றையும் பயன்படுத்தலாம்.

சந்தனம் மற்றும் பன்னீர் கலந்து, அந்த பேஸ்ட்டை அக்குள் பகுதியில் தடவிவர, வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

Related

அழகு குறிப்புகள். 4672369726094309439

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item