வெந்தயம்-நாட்டு மருந்துக்கடை கு.சிவராமன் - சித்த மருத்துவர்

நாட்டு மருந்துக்கடை கு.சிவராமன் - சித்த மருத்துவர் தமிழன் உணவில் கூடுதல் அக்கரையுடன் சேர்க்கப்படும் வ...

நாட்டு மருந்துக்கடை கு.சிவராமன் - சித்த மருத்துவர்தமிழன் உணவில் கூடுதல் அக்கரையுடன் சேர்க்கப்படும் வெந்தயம், கசப்புதான். ஆனால், அந்த கசப்பு கொண்டுள்ள மருத்துவ செய்திகள் அத்தனையும் இனிப்பு. சர்க்கரை நோயில் இருந்து, தலைமுடி உதிர்வு வரை அழகும் ஆரோக்கியமும் பரிமாறும் இந்த அதிசய விதைகள், சின்னஞ்சிறு நல மாத்திரைகள்.

கிரேக்கர்களால் இந்தியாவுக்குள் நுழைந்த வெந்தயம், சித்த, ஆயுர்வேத மருந்து என்பதுடன், தமிழர் உணவில் பெரும் ஆளுமையைப் பெற்ற மணமூட்டியும்கூட. நாட்பட்ட, தொற்றாத வாழ்நாள் நோய்க் கூட்டங்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தல், இதய நோய்கள் மற்றும் புற்று நோய் என அனைத்துக்கும் பயன்தரும் ஒரு மணமூட்டி, வெந்தயம் மட்டும்தான்.

“நாரில்லா உணவு நலம் தராது” என்ற புது மருத்துவ மொழி உலாவும் இன்றைய சூழலில், ‘வேகன்’ உணவாளர்களுக்கு அதிக நார்ச்சத்து தரும், ஒரே உணவு வெந்தயம் மட்டுமே. நார்ச்சத்தில் உள்ள இரு வகை நார்களான கரையும் நார், கரையாத நார் இரண்டுமே வெந்தயத்தில் உண்டு. கரையும் நார் இதய ரத்தத் தமனிகளில் சேரும் கொழுப்பைக் குறைக்க உதவும். கரையாத நாரில் இரு முக்கிய பயன் உள்ளன. ஒன்று, மலத்தை எளிதில் கழியவைக்கும். இன்னொன்று உணவோடு வரும் சர்க்கரை ரத்தத்தில் வேகமாகக் கலப்பதைத் தடுக்கும்.

மேற்கத்திய நாடுகள், வெந்தயத்தின் கசப்பை நீக்கி, சத்தை எடுத்து, ரொட்டிகளிலும் கேக்குகளிலும் பயன்படுத்தி, ரத்த கொழுப்பைக் கட்டுக்குள்வைக்கத் துவங்கியுள்ளனர். வெந்தயத்தின் ஹார்மோன்களைச் சீராக்கும் தன்மையால், ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் ஊட்டும் உணவாகவும் உலகின் பல பாரம்பர்ய மருத்துவ முறைகள் பதிவுசெய்து இருக்கின்றன.
மாதவிடாய் கால வலியான சூதகவலிக்கு (Dysmenorrhea) நவீன மருத்துவம் பல்வேறு காரணங்களைக் கண்டறிந்துள்ளது. சாதாரண ரத்தசோகை முதல், கர்ப்பப்பை உள் சவ்வு, கர்ப்பப்பைக்கு வெளியேயும் வளர்ந்து தொல்லை தரும் எண்ட்ரோமெட்ரோசைஸ் (Endometriosais) முதல் அடினோமயோசிஸ் (Adenomyosis) வரை பல காரணங்கள் பெண்ணுக்கு அதிகபட்ச வலியைத் தந்து, சராசரி வாழ்வைச் சிதைக்கின்றன.  வெந்தயத்தின் ‘டயாஜினின்’ சத்து, பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல் செயல்படும் வேதிச் சத்து. மாதவிடாய் வலிக்கு காரணம் ஏதாவது இருப்பினும், வெந்தயப் பொடி இந்த டயாஜினின் சத்தைக்கொண்டு, கர்ப்பப்பையை வலுவாக்கி, ஹார்மோன்களைச் சீராக்கி, வலியை நிரந்தரமாகப் போக்கும் கைகண்ட மருந்து.

இதன் லேசான இசிவகற்றித் தன்மையால், மாதவிடாய் வலியில் உடனடியாகவும், வலி நீக்க ஒரு பக்க விளைவில்லாத மருந்தாகவும் உதவுகிறது வெந்தயம். மாதவிடாய் வரும் முந்தைய ஐந்து நாட்களில், வெந்தயப் பொடியோ, வெந்தயக் களியோ,  வெந்தய தோசையோ, வெந்தயம் சேர்த்த குழம்போ சாப்பிடுவது வலியைக் குறைத்திட நிச்சயம் உதவும். ‘பித்த உதிரம் போகும்; பேராக் கணங்களும் போகும்; வீறு கயம் தணியும்’ என அகத்தியர் குணவாகடம் பாடி உள்ளது வெந்தயத்தை பற்றித்தான்.

வாய் துர்நாற்றம், வியர்வை துர்நாற்றம் இரண்டுக்கும் வெந்தயம் பயன்படும். வெந்தயத்தை வெந்நீரில் சில நேரம் ஊறவைத்து பிறகு, வெறும் வயிற்றில் அருந்த, குடலின் ஜீரண சுரப்புகளைச் சீராக்குவதன் மூலம், வாய் துர்நாற்றத்தை நீக்க உதவிடும்.

பாலூட்டும் தாய்மார்கள், வெந்தயத்தைக் கைக்குத்தல் புழுங்கல் அரிசிக் கஞ்சியில் சேர்ததுச் சாப்பிட, பால் சுரப்பு கூடும். வெந்தயமும் கருணைக்கிழங்கும் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டால், மெலிந்து இருக்கும் உடல் வலிமையுறும் என்கிறது சித்த மருத்துவம்.

தலை முடி உதிர்வைத் தடுக்கும் தைலங்களில் வெந்தயம் தவறாமல் இடம் பெறும். உடல் சூடு அதிகமாக உள்ளவர்களுக்கு முடி உதிர்தல் மிக முக்கியப் பிரச்னை. வெந்தயத்தை அரைத்துத் தலையில் அப்பி, சிறிது நேரம் ஊறவைத்து, பிறகு தலை முழுக, கண்களும் தலையும் குளிரும். தலைமுடி உதிர்வது நீங்கும்.


வெந்தய ஆய்வுகள்!
சர்க்கரையின் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளோர் (Impaired glucose tolerance stage), வெறும் வெந்தயத்தை லேசாக வறுத்துப் பொடித்துக்கொண்டு, காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டுவர, சர்க்கரை நோயைத் தாமதப்படுத்தும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். ரத்தக் கொழுப்பில் ஒரு வகையான ட்ரைகிளிசரைட்ஸ் (Triglycerides) அளவைக் குறைக்கவும் இதே முறை பயனளிக்கும். வெந்தயத்தில் உள்ள 4 ஹைட்ரோ ஐசோலியூசின் (4 HO-ILE) சத்து, இன்சுலின் சுரப்பைத் தூண்டி, ஆரம்பக்கட்ட சர்க்கரை நோயாளிக்குப் பயனாவதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இன்னும் சில ஆய்வுகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, வெந்தயம் ஈரல்  நொதிகளைத் தூண்டிச் சுரக்கவும் உதவுகிறது என அறிவித்துள்ளன.

Related

நாட்டு வைத்தியம் 1705943647105820672

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item