பனீர் லட்டு... பலே பலே! தால் ஷேக் ---- சமையல் குறிப்புகள்,
தேவையானவை: கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு (இரண்டும் சேர்த்து) - முக்கால் கப், முந்திரிப் பருப்பு - 10, சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 2 ஸ்...
https://pettagum.blogspot.com/2013/05/blog-post_7.html
தேவையானவை: கடலைப்பருப்பு,
பயத்தம்பருப்பு (இரண்டும் சேர்த்து) - முக்கால் கப், முந்திரிப் பருப்பு -
10, சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 2 ஸ்பூன், பால் - 2 டம்ளர், கேசரி
பவுடர் - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், ஆப்பிள் துண்டுகள் -
அரை கப்.
செய்முறை:
பருப்புகளை வாசம் வரும் வரை நெய்யில் வறுத்து, 2 கப் தண்ணீர் சேர்த்து
குக்கரில் வேகவிடவும். இதை ஆற வைத்து... தோல் நீக்கிய ஆப்பிள் துண்டுகள்,
சர்க்கரை ஆகியவற்றுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு கேசரி
பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இதை குளிர்ந்த பாலில் கலந்து
பருகவும். சுவையும், சத்தும் நிறைந்த இந்த பானம், வெயில் காலத்தில்
உடலுக்கு இதம் அளிக்கும்.
-
பனீர் லட்டு
தேவையானவை: பனீர் - 500 கிராம், மில்க்மெய்டு - 400 கிராம், முந்திரிப்பருப்பு - 50 கிராம், செர்ரிப் பழம் - தேவைக்கேற்ப.
செய்முறை: அகலமான
வாணலியில் அல்லது பாத்திரத்தில் மில்க்மெய்டு மற்றும் பனீரை சேர்த்து
அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். கெட்டியான பதம் வந்ததும் இறக்கி,
வறுத்த முந்திரிப்பருப்பை போட்டுக் கிளறி உருண்டையாக பிடிக்கவும்.
செர்ரிப் பழத்தை மேலாகப் பதித்து அலங்கரிக்கவும். இதை குழந்தைகள் மிகவும்
விரும்பிச் சாப்பிடுவார்கள்.
Post a Comment