கொத்தமல்லி -- மருத்துவப்பயன்கள்

கொத்தமல்லி:. மருத்துவப்பயன்கள் :- சிறுநீர் பெருக்கி, அகட்டு வாய்வகற்றி, ஊக்கமூட்டி, உரமாக்கு, நறுமணமூட்டி. தீர்க்கும் நோய்கள்- காச்சல...

கொத்தமல்லி:.

மருத்துவப்பயன்கள் :- சிறுநீர் பெருக்கி, அகட்டு வாய்வகற்றி, ஊக்கமூட்டி, உரமாக்கு, நறுமணமூட்டி. தீர்க்கும் நோய்கள்- காச்சல், மூன்று தோசங்கள், நாவரட்சி, எரிச்சல், வாந்தி, இழுப்பு, மூலநோய், இதயபலவீனம், மயக்கம், இரத்தக்கழிசல், செரியாமை, வயிற்றுப் போக்கு, நெச்செரிச்சல், வாய்க்குளரல், சுவையின்மை, தலைநோய், உட்சூடு, குளிர்காச்சல், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தொண்டைக்கட்டு, வரட்டு இருமல், கல்லீரல் பலப்படுத்த,
இரத்தத்தில் கலந்துள்ள சர்கரையை குறைக்கவும், இரத்த அழுத்தம்,  பயித்தியம், வாந்தி, விக்கல், தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்சுவலி, கட்டி வீக்கம், கண்ணில் நீர் வடிதல், கண் சூடு, பார்வை மந்தம், இடுப்பு வலி, சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய் கோணல், ஆகியவை குணமாகும். மன வலிமை மிகும். மன அமைதி, தூக்கம் கொடுக்கும். வாய் நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் குறையும்.
கொத்துமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த சூடு தணியும், சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.
ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்ச்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.
கொத்துமல்லியைச் சிறிது காடியில் அரைத்துக் கொடுக்கச் சாராய வெறி நீங்கும். புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.
கொத்துமல்லி விதை 100 கிராம், நெல்லி வற்றல், சந்தனம் வகைக்கு 50 கிராம் பொடி செய்து அதில் 200 கிராம் சர்கரை கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரத் தலைச் சுற்றல், நெஞ்செரிவு, வாய்நீரூரல், சுவையின்மை ஆகியவை தீரும்.
கொத்துமல்லி 300 கிராம் சீரகம், அதமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை, சதகுப்பை வகைக்கு 50 கிராம் இளவறுப்பாய் வறுத்துப் பொடித்துச் சலித்து 600 கிராம் வெள்ளைக் கற்கண்டுப் பொடி கலந்து (கொத்துமல்லி சூரணம்) காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உட்சூடு, குளிர்காச்சல், பயித்தியம், செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்செரிவு, நெஞ்சுவலி ஆகியவை தீரும். நீடித்துக் கொடுத்துவரப் பலவாறான தலை நோய்கள், கண்ணில் நீர் வடிதல், பார்வை மந்தம், இடுப்புவலி, உட்காய்ச்சல், சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய்கோணல், வாய்க்குளரல் ஆகியவை தீரும். மனவலிமை மிகும்.

கொத்துமல்லி இலை, சிரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்த கிறுகிறுப்பு நீங்கும்.

Related

மூலிகைகள் கீரைகள் 8455273631022673063

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item