முருங்கை பூ பொரியல்---சமையல் குறிப்புகள்
தேவையான பொருள்கள்: புதிதாகப் பறித்த முருங்கைப்பூ - 1 கப் வெங்காயம் - 2 உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 தாள...
புதிதாகப் பறித்த முருங்கைப்பூ - 1 கப்
வெங்காயம் - 2
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
தாளிக்க எண்ணெய், கடுகு - சிறிது
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
முருங்கைப்பூவை அலசிப் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
காய்ந்த மிளகாயைக் கிள்ளி வைத்துக்கெள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கியதும், முருங்கைப்பூவை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் சிறிது தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும்.
பூ நன்கு வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும் ....
3 comments
எனக்கு அப்போவே ஒரு சந்தேகம் இருந்தது உங்களுக்கு சுகம் இல்லாமல்தான் இருந்திருக்கும் என்று... ஆனால் கண் அறுவை சிகிச்சை.. இதை எதி பார்க்கவில்லை... இப்போது எப்படி இருக்கிறீர்கள் கண் எப்படி இருக்கிறது?? மிகவும் கவனமாக இருங்கள்... அதிக வலுவான வேலைகளை செய்யாதீர்கள்.. நீங்கள் இப்போது கணணியை பார்ப்பதே தவறு.. அதனால் கொஞ்ச நாள் இடைவெளி விடுங்கள்.
அன்பு நெஞ்சம் சகோதரர் முஹம்மது மபாஸ் அவர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள். தங்களின் அன்பான வேண்டுகோளுக்கு அதிகமான நன்றிகள் பல உரித்தாக்குகிறேன் அன்புடன் A.S. முஹம்மது அலி
Post a Comment