மட்டன் க்ரீன் கறி... காரம் தூக்கல்... ருசி அதைவிட தூக்கல்!

வா ர நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக ...

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'மட்டன் கிரீன் கறி' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.
தேவையானவை:
மட்டன் - அரை கிலோ
பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) - 100 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சோம்பு  - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் -  5
கொத்தமல்லித்தழை - அரை கட்டு
தேங்காய்த் துருவல் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
வினிகர் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 30 மிலி
செய்முறை:
மட்டனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். சோம்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் அதனுடன் மட்டனை சேர்த்து வதக்கி, உப்பு,  அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை நீங்கி மசாலாவிலிருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
அடுப்பில் இருக்கும் மட்டன் கலவையுடன் வினிகர் மற்றும் தேவையான அளவு சுடுநீர் சேர்த்து நன்கு வேகவிடவும். மட்டன் நன்கு வெந்தவுடன் தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்து கலவையை வேகவிடவும். பின்னர் கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறிவிட்டு, குழம்பு தயார் ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
மட்டன் கிரீன் கறி... சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை உள்ளிட்ட எல்லா வகை உணவுகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.
பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழையை அதிகமாகப் பயன்படுத்துவதால் குழம்பு பச்சை நிறத்தில் இருக்கும். அதனால்தான் இந்த டிஷ்ஷுக்கு மட்டன் கிரீன் கறி எனப் பெயர்.
குறிப்பு:
காரம் கூடுதலாக விரும்பினால் பச்சை மிளகாயை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

Related

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் 7264271227988923970

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு விவசாயக்குறிப்புக்கள் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item