ஷாம்பு பயன்படுத்தினால் பொடுகு வருகிறதா? இதை டிரை பண்ணுங்க!

ஷாம்பு பயன்படுத்தினால் பொடுகு வருகிறதா? இதை டிரை பண்ணுங்க! சிலருக்கு ஷாம்பு பயன்படுத்தினால் தலையில் பொடுகு வரும். அப்படிப்பட்ட பெண...

ஷாம்பு பயன்படுத்தினால் பொடுகு வருகிறதா? இதை டிரை பண்ணுங்க!

சிலருக்கு ஷாம்பு பயன்படுத்தினால் தலையில் பொடுகு வரும். அப்படிப்பட்ட பெண்கள், கைப்பிடி செம்பருத்தி இலைகள், 10 செம்பருத்திப் பூக்கள், இவற்றுடன் ஊறவைத்த 10 பூந்திக்காய்களை சேர்த்து, அரைத்துத் தலையில் தடவிக் குளிக்கலாம்.

பெண்களுக்குத் தலையில் வரும் பிரச்னைகளில் ஒன்று, பொடுகு. பொடுகு வந்துவிட்டால்... அரிப்பு, ஸ்கால்ப் கட்டிகள் எனப் பெரும் தொந்தரவாக இருக்கும். தலைமுடி கொத்துக் கொத்தாக உதிர ஆரம்பிக்கும். இதற்குப் பொடுகு ஷாம்புவைத் தவிர, இயற்கை முறை தீர்வுகளும் உண்டு என்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

*  2 டீஸ்பூன் வெந்தயத்தை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். அதை, இரவே தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில் எழுந்ததும், இதனுடன் ஃபிரிட்ஜில் வைக்காத மோர் அல்லது தயிர் கலக்கவும். ஸ்கால்ப்பில் படுவதுபோல தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊறவிடவும். வெந்தய பேஸ்ட்டைத் தலையில் தடவுவதற்கு முன்பு, தலையை நன்கு வாருங்கள். அப்போதுதான் தளர்வாக இருக்கும் பொடுகுத் துகள்கள் உதிரும். ஆனால், சைனஸ் பிரச்னை இருப்பவர்கள் இதை ஃபாலோ செய்யாமல் இருப்பது நல்லது. 

   * தலையில் ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெயைத் தடவுங்கள். பிறகு, எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி, முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊறவிட்டு அலசுங்கள். ஒரே வாஷில் பொடுகு குறைந்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம். ஆனால், எலுமிச்சம் சாற்றை எண்ணெய் தடவாத தலையில் அப்ளை செய்யவே கூடாது. 

   * சோற்றுக்கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து, நல்ல தண்ணீரில் போட்டு வாஷ் செய்யவும். தண்ணீரின் மேலாக வெள்ளைப் படலம் ஒன்று படியும். இது அமிலத்தன்மை கொண்டது என்பதால் அதைப் பயன்படுத்தக் கூடாது. கீழே தங்கிவிட்ட ஜெல்லை மட்டும் எடுத்து, அதனுடன் கால் டீஸ்பூன் வால் மிளகு சேர்த்து அரைக்கவும். இந்தக் கலவையைத் தலையில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்யவும். இது, பொடுகை நீக்குவதுடன் முடிக்கும் நல்ல பளபளப்பு தரும்.

* சிலருக்கு ஷாம்பு பயன்படுத்தினால் தலையில் பொடுகு வரும். அப்படிப்பட்ட பெண்கள், கைப்பிடி செம்பருத்தி இலைகள், 10 செம்பருத்திப் பூக்கள், இவற்றுடன் ஊறவைத்த 10 பூந்திக்காய்களைச் சேர்த்து, அரைத்து தலையில் தடவிக் குளிக்கலாம். தலைமுடி ஷாம்பு போட்டது போலவும் இருக்கும்; பொடுகு வராது, பொடுகு இருந்தாலும் சரியாகிவிடும்.

* நாட்டு மருந்துக் கடைகளில் நெல்லிக்காய் பவுடர் கிடைக்கும். அதில் 4 டீஸ்பூன், தயிர் 4 டீஸ்பூன் இரண்டையும் கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, வாஷ் செய்யவும். பொடுகு படிப்படியாகக் குறைந்து, ஸ்கால்ப் சுத்தமாக இருக்கும்.

* 4 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் கலந்துகொள்ளவும். தலைக்குக் குளித்த பிறகு, இந்தக் கலவையைத் தலையின் ஸ்காப்பில் தடவி, 5 நிமிடம் கழித்து வாஷ் செய்துவிடுங்கள். இதுவும் பொடுகை விரட்டும். பொடுகுப் பிரச்னைக்கு காஸ்மெட்டிக் வினிகரும் பயன்படுத்தலாம். வினிகர் வேண்டாம் என்பவர்கள், ஆப்பிளைத் துருவி சாறெடுத்து, அந்தச் சாற்றை ஸ்கால்ப்பில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்துவிடவும்.

* டீ ட்ரீ ஆயிலில் 8 துளிகள் எடுத்து, அதைத் தலை முழுவதும் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து வாஷ் செய்துவிடவும். பொடுகு எங்கே இருக்கு என்றே தெரியாமல் போய்விடும்.

* 10 மில்லி விளக்கெண்ணெயைச் சூடுபடுத்தி, அதில் 10 கிராம் தனியா பவுடரைக் கலந்து, தலையில் தடவி ஊறவைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து தலையை வாஷ் செய்துவிடவும். விளக்கெண்ணெயும் தனியாவும் பொடுகையும் போக்கும்; முடியையும் வளர்க்கும்.

* 10 மில்லி விளக்கெண்ணெயைச் சூடுபடுத்தி, அதில் கைப்பிடி துளசியைப் போட்டு அந்த எண்ணெய்யையும் பொடுகு நீக்கப் பயன்படுத்தலாம். 

Related

மூட்டு வலிக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

முதிர்ந்த வயதை நெருங்கும்போது, மூட்டு வலிதான் முதலில் எட்டிப்பார்க்கும்.  மூட்டுகள் சிதைவதால் மூட்டு வலி உண்டாகிறது; மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் ...

நம்ம ஊரு வைத்தியம் - புளி!

நாம அன்றாடம் சாப்பிடக்கூடிய சாப்பாட்டுல உப்பு, புளி, காரம் கட்டாயம் இருக்கும். அதுல முக்கியமா சொல்லணும்னா இந்த புளி இருக்கே... இது இல்லைனா, பல நேரம் சாப்பாடு ருசிக்காது....

தொண்டை கரகரப்புக்கு---

அறிகுறிகள்: தொண்டை கரகரப்பு. தேவையான பொருட்கள்: சுக்கு மிளகு திப்பிலி. தேன் செய்முறை: சுக்கு, மிளகு, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்ப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Nov 26, 2024 10:43:5 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,118

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item