கைமணம்! ஸ்பாஞ்ச் பர்ஃபி
தேவையானவை: கடலைமாவு & ஒரு கப், சர்க்கரை & 3 கப், தேங்காய் துருவல் & ஒரு கப், வெனிலா எசன்ஸ் & சில துளிகள், நெய் & ஒரு கப...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_8605.html?m=0
தேவையானவை: கடலைமாவு & ஒரு கப், சர்க்கரை & 3 கப், தேங்காய் துருவல் & ஒரு கப், வெனிலா எசன்ஸ் & சில துளிகள், நெய் & ஒரு கப்.
செய்முறை: கடலைமாவை வெறும் வாணலியில் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். தேங்காய் துருவலை ஈரம் போக வதக்கி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பாகு கம்பிப் பதம் வந்ததும், கடலைமாவு, தேங்காய் துருவல், சிறிது நெய் விட்டுக் கிளறவும். கிளறிக்கொண்டே மீதியிருக்கும் நெய்யை ஊற்றி, பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது, எசன்ஸை விட்டுக் கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தவும். விரும்பினால் மேலாக டூட்டிஃப்ரூட்டி, முந்திரிப்பருப்பு போட்டு அலங்கரிக்கலாம். பெயருக்கேற்றாற்போல், ‘ஸ்பாஞ்ச்’ போல மென்மையாக இருக்கும் இந்த பர்ஃபி.
ஸ்பாஞ்ச் பர்ஃபி: பாதாம் அல்லது முந்திரிப் பருப்பு.. ஏதாவது ஒன்றைப் பொடிசெய்து, கடலை மாவுக் கலவையுடன் கலந்து பர்ஃபி செய்தால், சுவை இன்னும் அபாரமாக இருக்கிறது.
--------------------------------------------------------------------------------
Post a Comment