ரெசிப்பிஸ் கைமணம்! 'ஜில்'லுனு ஒரு கதம்ப கீர்!
கதம்ப கீர் தேவையானவை: பால் - 3 கப், பாதாம்பருப்பு - 8, முந்திரி-பருப்பு - 10, பாசிப்பருப்பு - கால் கப், கடலைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2518.html?m=0
கதம்ப கீர்
தேவையானவை: பால் - 3 கப், பாதாம்பருப்பு - 8, முந்திரி-பருப்பு - 10, பாசிப்பருப்பு - கால் கப், கடலைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன், கசகசா - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - அரை கப், சர்க்கரை - 2 கப், உலர் திராட்சை - 10, நெய் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: பாசிப்பருப்பையும் கடலைப்பருப்பையும் வேக வைத்துக் கொள்ளவும். கசகசா, முந்திரி, பாதாமை பாலில் ஊறப் போடவும். ஊறியதும் அதனுடன் தேங்காய் துருவல், சிறிது பால் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வெந்த பருப்புகளையும் கடைசியாக சேர்த்து அரைக்கவும்.
பாலை கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து, கரைந்ததும் அரைத்த விழுதை சேர்த்து, அடி பிடிக்காமல் கிளறவும். பொங்கி வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து (விரும்பினால் ஏதாவது ஒரு எசன்ஸையும் சேர்த்து) இறக்கவும்.
திராட்சையை நெய்யில் பொன்னிறமாக வறுத்து கொட்டிக் கிளறவும். ஆறியதும் ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்
கதம்ப கீர்: பாசிப்பருப்பையும் கடலைப்பருப்பையும் ஒரு டீஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்து செய்தால் வாசனையாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
Post a Comment