வீட்டுக் குறிப்புகள்- டிப்ஸ்
@ வீட்டிலுள்ள பெட்ஷீட் ,போர்வை முதலானவற்றை மடித்து வைத்தால் முடை நாற்றம் வீசும். இதைத் தவிர்க்க அழகாய் மடித்துக் கொடியில் தொங்க விட்டால் காற...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_8531.html?m=0
@ வீட்டிலுள்ள பெட்ஷீட் ,போர்வை முதலானவற்றை மடித்து வைத்தால் முடை நாற்றம் வீசும். இதைத் தவிர்க்க அழகாய் மடித்துக் கொடியில் தொங்க விட்டால் காற்றில் ஆடி நாற்றமின்றி இருக்கும்.
@ தலையணை உறைகளை ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் சலவை செய்யாமல் ஒவ்வொரு நாளும் இரண்டிரண்டாகத் துவைத்து உலர்த்தினால் வேலையும் எளிது. உலர்வதும் எளிது.
@ துணி உலர்த்தும் ஹேங்கர்களை நிறைய வாங்கிப் போட்டால் எல்லாவிதமான துணிகளையும் அதில் தொங்க விட்டு உலர்த்தலாம். குறைவான இடத்தில் நிறையத் துணிகளைப் போட்டு உலர்த்தலாம்.
@ வீடுகளில் துணி துவைத்துக் குளிப்பவர்கள் சோப்புப் போட்டு அலசிய துணிகளின் மீது நின்று கொண்டு குளித்தால் சோப்பு நுரை ஓடியே போய் விடும். நீரும் சிக்கனமாகச் செலவாகும்.
@ அடிக்கடி புழங்காத பாத்திரங்களைப் பயன்படுத்தி விட்டுத் துலக்கி வைக்கிறபோது மெல்லிய துணியால் ஈரம் போக துடைத்து வெயிலில் வைத்து எடுத்து வைத்தால் புள்ளிகள் விழாது.
@ தரையைப் பெருக்குகிற போது சற்றே நிமிர்ந்து சுவர்கள் இணையு மிடங்களிலும் ஒட்டடை அடித்தால் வலை கட்டிய சுவர்களைக் காணவே முடியாது. பளிச்சென்று இருக்கும்.
@ புகைப்படங்களை பிரேம் பண்ணாமல் லாமினேஷன் பண்ணிக் கொண்டால் கண்ணாடி உடைந்து விடுகிற அபாயம் இல்லை. தேவையான இடங்களில் அழகாக வைத்துக் கொள்ளவும் முடியும்.
@ காலியாகி விட்ட ஸ்கெட்ச் பென்களை சிறிய துண்டுகளாய்க் கட் செய்து நு}லில் கோர்த்து வாயில் தோரணம் தயார் பண்ணலாம். பல வண்ணங்களில் அவை காற்றிலாடும் அழகே அழகு.
@ பழைய பித்தளை வெங்கல தம்ளர்கள், ஜாடிகள் ஆகியவற்றை பிராஸ்ஸோ கொண்டு மெருகு ஏற்றி பூச் சாடிகளாகப் பயன்படுத்தலாம்.
@ கிழிந்து போன பெட்ஷீட்களை நன்கு மடித்து ஓரங்களில் தைத்து கால் மிதிகளாகப் பயன்படுத்தலாம். இவை ஈரத்தையும் நன்கு உறிஞ்சும்.
@ எறும்புகள், பாச்சைகள் உணவுப்பண்டங்களை நெருங்காதிருக்க இப்போதெல்லாம் நோ என்ட்ரி, லட்சு மண் ரேகா போன்ற மருந்து சாக்பீஸ்களால் கோடு போடுகிறார்கள். கோடுகளின் மீது பேப்பர்களை விரித்துப் போட்டே பண்டங்கள் உள்ள பாத்திரங்களை வைக்க வேண்டும். சிறு குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் சாக்பீஸை வைக்க வேண்டும்.
@ ஷாம்பூக் குளியலை விட ஆவரை இலை, செம்பருத்தி இலை போன்றவற்றை அரைத்துத் தேய்த்துக் குளித்தால் கூந்தலும் சுத்தமாகும். கருகருவென்றும் வளரும்.
@ கிரில் கேட் உள்ள வீடுகளில் கிரில் கேட்டில் எங் கெல்லாம் இணைப்பு உள்ளதோ அங்கெல்லாம் துளி எண்ணெய் விட்டு வைக்க சிக்கல் இல்லாமல் தள்ள முடியும்.
@ லெட்ரினைச் சுத்தம் பண்ண சோப்பு நீரைப் பயன் படுத்தினால் மாசு நீக்கும் நுண் உயிரிகள் அழிந்து விடும். தூய நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
@ காஸ் சிலிண்டரைப் பயன்படுத்தத் துவங்கிய நாளை சாக்பீஸால் குறித்து விட்டால் சிலிண்டர் எத்தனை நாட்களுக்குப் பயன் பட்டது என்று சுலபமாகக் கண்டறியலாம்.
காலியான டூத் பேஸ்ட் ட்யூப்களை இரண்டாகக் கத்தரித்து, தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரில் கண்ணாடிகள், ஜன்னல்கள், மேஜைகள், ஸ்கூட்டர், சைக்கிள் இவற்றைத் துடைக்க, அவை பளிச் பளிச்தான்!
வீட்டுச் சுவரில் விரிசல் இருக்கிறதா? ஒயிட் சிமென்ட்டுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவைக் கலந்து கரைசலாக்கி விரிசலில் ஊற்றுங்கள். விரிசலே தெரியாதபடி ஒட்டிக் கொள்ளும்!
வாழை இலை வாங்கி வந்து இரண்டு நாட்கள் வீட்டில் வைத்திருந்தாலே பழுத்து விடும். இலையை சுருட்டிக் கட்டி, படுக்கையாக வைக்காமல், செங்குத்தாக நிமிர்த்தி வைத்துப் பாருங்கள்.. நான்கு நாட்கள் ஆனாலும் இலை பழுக்காது!
ஈக்கள் மொய்க்கும் சீஸன் இது. சாப்பாட்டு மேஜை அதிகம் ஈ நாடாமல் இருக்க வேண்டுமா? கொஞ்சம் புதினா அல்லது கறிவேப்பிலையை மேஜை மீது போட்டு வையுங்கள். ஈக்கள் பக்கத்திலேயே வராது!
ஸ்டீல் பாத்திரங்கள் கறைப்பட்டால், அரை கப் தண்ணீரில் 3 ஸ்பூன் வினிகர் கலந்து ஊற்றி, சூடாக்கி, முழுவதும் ஆவியான பிறகு அடுப்பி லிருந்து இறக்கி கழுவுங்கள். பாத்திரம் பளிச்சிடும்!
ஆணி அடிக்கும்போது, ஆணியின் நுனியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் எளிதாக இறங்கும்!
உங்கள் கேஸ் அடுப்பு, புதியது போல் தோற்றம் அளிக்க வேண்டுமா? சமையல் முடிந்ததும் அடுப்பு சூடாக இருக்கும்போதே சுத்தம் செய்து விடுங்கள். கறைகளை தேடினாலும் கிடைக்காது!
துணிகள் கிழிந்து விட்டால் உடனே தையல் போட முடியாத பட்சத்தில், கிழிந்த பாகத்தில் மட்டும் ஒரு செலோ டேப்பை ஒட்ட வைத்து விடுங்கள். இதனால் அந்த இடத்தில் மேலும் நூல் பிரியாமல் இருக்கும்!
கோதுமையை வெறும் வாணலியில் லேசாக வறுத்து பின்னர் மாவாக அரைத்து வைத்துக் கொண்டால் வெகு நாட்கள் கெடாது. செய்கின்ற சப்பாத்தி, பூரியும் சற்றே மேம்பட்ட சுவையுடன் இருக்கும்!
இரவு தூங்குவதற்கு முன் சமையல் கட்டு ‘ஸிங்க்’ ஓட்டைக்குள் பிளீச்சிங் பவுடரை நிறைய தூவி விட்டு ஒரு கல்லை வைத்து மூடவும். மறுநாள் காலை ஒரு சொம்பு வெந்நீர் ஊற்றி நன்றாகக் கழுவவும். இதனால் குழாயில் அடைப்பு ஏற்படாமல் இருப்பதோடு ஓட்டை வழியாக பூரான், பூச்சியும் வராது. 15 நாட்களுக்கு ஒரு தடவை இப்படி செய்வது நல்லது!
Post a Comment