சமையல் குறிப்புகள்! கீரை கட்லெட்
கீரை கட்லெட் தேவையானவை: பொடியாக நறுக்கிய தண்டு கீரை-அரை கப், துவரம்பருப்பு - ஒன்றரை கப், பெரிய வெங்காயம் - 4, பூண்டு - 10 பல், இஞ்சி - ஒரு...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_23.html?m=0
கீரை கட்லெட்
தேவையானவை: பொடியாக நறுக்கிய தண்டு கீரை-அரை கப், துவரம்பருப்பு - ஒன்றரை கப், பெரிய வெங்காயம் - 4, பூண்டு - 10 பல், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 10, சோம்பு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பை ஊற வைத்து, தண்ணீரை வடித்து, பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, சோம்பு, உப்பு சேர்த்து அரைக்கவும்.
இந்த கலவையோடு நறுக்கிய கீரையை சேர்த்துக் கலக்கவும். இதில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து ஆவியில் வேகவிட்டு எடுத்து துண்டுகள் போடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொரித்தெடுக்கவும்.
Post a Comment