ரசிக்க.. ருசிக்க.. சுறா குழம்பு!
தேவையான பொருட்கள் சுறா - 1/2 கிலோ சாம்பார் வெங்காயம் - 200 கிராம் நாட்டுத் தக்காளி - 200 கிராம் காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_3562.html?m=0
தேவையான பொருட்கள்
சுறா - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
நாட்டுத் தக்காளி - 200 கிராம்
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
புளி - எலுமிச்சம் பழ அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
தாளிக்க கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை
* சுறாவைச் சுத்தம் செய்து எலும்பு நீக்கி துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
* வெங்காயத்தை உரித்துக்கொள்ளவும், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.
* வெங்காயத்தை வதக்கவும், பின் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
* புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
* பிறகு சுறாவைச் சேர்த்து குழம்பு கெட்டியானதும் இறக்கி விடவும்.
* தேவையெனில் இறக்கும் பொழுது மல்லி இலை தூவுங்கள். வாசமாக இருக்கும்.
Post a Comment