ரசிக்க.. ருசிக்க.. முட்டை மிளகு மசாலா!
தேவையான பொருட்கள் வேக வைத்த முட்டை - 4 வெங்காயம் - 100 கிராம் பச்சைமிளகாய் - 4 மிளகுத்தூள் - 2 டீஸ்பூன் தனியாத்தூள் - 1 டீஸ்பூன் மிளகாய்த்த...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5635.html?m=0
தேவையான பொருட்கள்
வேக வைத்த முட்டை - 4
வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 4
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
* வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.
* வேக வைத்த முட்டையை நான்காகக் கீறிக் கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
* பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* இப்போது மிளகுத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், முட்டை ஆகியவற்றைச் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கிளறவும்.
* முட்டை மசாலாவுடன் சேர்ந்து வந்ததும் இறக்கி விடவும்.
* முட்டை மிளகு மசாலா ரெடி.
இது சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள `சூப்பர் காம்பினேஷனாக' இருக்கும்.
Post a Comment