ரசிக்க.. ருசிக்க..! திடீர் பிரெட் ஸ்வீட்
திடீர் பிரெட் ஸ்வீட் தேவையானவை: ஸ்வீட் பிரெட் துண்டுகள் & 10, ஏலக்காய்த்தூள் & அரை டீஸ்பூன், நெய் & பொரிக்க, வறுத்த முந்திரி, த...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_7626.html?m=0
திடீர் பிரெட் ஸ்வீட்
தேவையானவை: ஸ்வீட் பிரெட் துண்டுகள் & 10, ஏலக்காய்த்தூள் & அரை டீஸ்பூன், நெய் & பொரிக்க, வறுத்த முந்திரி, திராட்சை & ஒரு டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை பாகு தயாரிக்க : சர்க்கரை, தண்ணீர் & தலா 2 கப்.
செய்முறை: பிரெட்டின் ஓரத்தை நீக்கி விட்டு முக்கோண வடிவில் வெட்டி நெய்யில் பொரிக்கவும் (டிஷ்யூ பேப்பரில் பொரித்த பிரெட் துண்டுகளை ஒற்றியெடுத்தால் அதிகப்படியான நெய் வெளியேறிவிடும்). தண்ணீரில் சர்க்கரையைக் கரைத்து அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கொதித்து கையால் தொட்டால் ஒட்டிக் கொள்ளும் பதம் வந்ததும் இறக்கி விடவும். பொரித்த பிரெட் துண்டுகளை சர்க்கரை பாகில் சிறிது நேரம் ஊறவிடவும். இதன்மேல் ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரி, திராட்சை தூவி பரிமாறவும்.
Post a Comment