கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், தர்ப்பூசணி ரசாயணம்!
தர்ப்பூசணி ரசாயணம் தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், தேங்காய் வழுக்கல் (இளநீரில் இருப்பது - பொடிப் பொடியா...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_3117.html?m=0
தர்ப்பூசணி ரசாயணம்
தேவையான பொருட்கள்:
தர்ப்பூசணி (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், தேங்காய் வழுக்கல் (இளநீரில் இருப்பது - பொடிப் பொடியாக நறுக்கவும்) - 1 கப், கெட்டித் தேங்காய்ப் பால் - அரை கப், ஏலக்காய் - ஒன்று, வெல்லம் - அரை கப், உப்பு - ஒரு சிட்டிகை. விருப்பப்பட்டவர்கள், சிறிது சுக்குப் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.
செய்முறை:
தேங்காய்ப் பாலில் வெல்லத்தைக் கரைய விட்டு அடுப்பில் இளம் சூட்டில் வைத்து சிறிது நேரம் ஆன பின், ஏலக்காய்ப் பொடி போட்டு இறக்கவும். சூடு ஆறியதும்இதனுடன் தர்ப்பூசணி, தேங்காய் வழுக்கை, சுக்குப் பொடி, உப்பு சேர்த்து, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும் (அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் போதுமானது.)
Post a Comment