ப்யூட்டி ரெசிபிகள் வெந்தய பேக்--ஆயில் மசாஜ்
ப்யூட்டி ரெசிபிகள் வெந்தய பேக் தேவையான பொருட்கள் : வெந்தயம்-25 கிராம், தண்ணீர்-1 கப். செய்முறை : வெந்தயத்தை முதல் நாள் இரவே, 1 கப் தண்ண...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_762.html?m=0
ப்யூட்டி ரெசிபிகள்
வெந்தய பேக்
தேவையான பொருட்கள் : வெந்தயம்-25 கிராம், தண்ணீர்-1 கப்.
செய்முறை : வெந்தயத்தை முதல் நாள் இரவே, 1 கப் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் நன்றாக ஊறிய இந்த வெந்தயத்தை ‘மை’ போல அரைத்து முடி வேர்க்கால்களில் படும்படி நன்றாகத் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து சீயக்காயோ அல்லது மைல்ட் ஷாம்பூவோ போட்டு கூந்தலை அலசினால் தலையும் சுத்தமாகும். முடியும் சில்க்கியாகும். இன்னொரு விஷயம்... வெந்தயம் முடியின் வேர்க்கால்களை நன்கு பலப்படுத்தவும் செய்யும்.
ஹென்னா நெல்லி ‘பேக்’
தேவையான பொருட்கள் : மருதாணி இலைகள்-ஒரு கைப்பிடி, முழு நெல்லிக்காய்_ அரை கைப்பிடி.
செய்முறை : மருதாணி இலைகள், நெல்லிக்காய் இரண்டையும் விழுதாக அரைத்து முடியில் தடவுங்கள் (வேர்க்கால்களில் நன்கு படும்படி). ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு தரமான, மைல்டான ஷாம்பூவால் தலைமுடியை அலசி விடுங்கள். வாரம் ஒரு முறை இப்படிச் செய்து வந்தால் உடல் குளிர்ச்சியாகும். தலைமுடியும் நன்கு வளரும்.
ஹென்னா, தலைமுடியை வறண்டு போகச் செய்யும் என்று சொல்வார்கள். ஆனால், நெல்லிக்காயுடன் மருதாணி இலையும் சேர்த்து அரைத்து தலையில் தடவுவதால் முடி வறண்டு போகாது. அது மட்டுமல்ல... இந்த ‘ஹென்னா நெல்லி பேக்’ வறண்ட எண்ணெய்ப் பசை, நார்மல் ஆகிய மூன்று வகை கூந்தலுக்கும் பொருந்தும்.
-----------------------------------------------------------------------------------------------------
ஆயில் மசாஜ்
தேவையான பொருட்கள் : தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்-50 கிராம்
செய்முறை : எண்ணெயை லேசாக சூடுபடுத்தி அதை விரல் நுனிகளில் தொட்டுக் கொண்டு முடியின் வேர்க்கால்களில் படும்படி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்துத் தலையை ஷாம்பூவால் அலசி விடுங்கள். வாரம் இரு முறை இந்த ஆயில் மசாஜை தொடர்ந்து செய்து வந்தால் வெயிலால் முடி முரட்டுத் தனமாகி விடுவதைத் தவிர்க்கலாம்.
Post a Comment