சமையல் குறிப்புகள்... டிப்ஸ்!
1.வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவலாம். 2. காலிபிளவர், கீரை இவற்றை சமைப்பதற்கு முன்பு வ...
1.வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவலாம்.
2. காலிபிளவர், கீரை இவற்றை சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் சிறிது நேரம் போட்டு வைத்தால் அவற்றில் உள்ள புழு, மண் அடியில் தங்கிவிடும்.
3. குருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
4. அடைக்கு அரைத்த மாவில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
5. ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும்.
6. அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
7. தக்காளியின் தோல் நீக்க தக்காளியின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் கத்தியால் சிறிது கீறிவிட்டு 10 நொடிகள் சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல் சுலபமாகக் கழன்று விடும்.
8. சப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரோட்டின் சத்தும் கிடைக்கும்.
9. சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.
10. குலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகிவிட்டால் ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகிவிடும்.
11. கட்லெட் செய்ய 'பிரெட் கிரம்ப்ஸ்' கிடைக்கவில்லையெனில் ரவையை மிக்சியில் அரைத்து பயன்படுத்தலாம்.
12. கூடையில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளை விடாமல் இருக்க, கூடவே, கூடையில் ஒரு ஆப்பிள் பழத்தையும் போட்டு வையுங்கள்.
வீட்டில் டீ தயாரிக்க நீரைக் கொதிக்க விடும் போது ஒரே ஒரு புதினா இலையையும் போட்டுக் கொதிக்க விட்டுப் பாருங்கள். டீயின் மணமும், ருசியும் அபாரமாயிருக்கும். @ ரசம் தயாரிக்கும் போது சுண்டைக்காய் அளவு இஞ்சி சேருங்கள். சூப்பராக இருக்கும் ரசம். @ இட்லிக்கு மாவாட்டும்போது ஒரே ஒரு ஆமணக்கு விதையைத் தோல் நீக்கிப் போட்டுப் பாருங்கள். இட்லி விள்ளாமல் விரியாமல் மெத்மெத்தென்று இருக்கும். @ காட்டு நெல்லிக் காயைக் கழுவி, கொதிக்க வைத்த நீரில் போட்டு சிறிது உப்பு போட்டு மூடி வையுங்கள். வைட்டமின் குறையாத ஊறுகாய் ரெடி.தேவைப்பட்டால் மிளகாய்ப் பொடியும் போட்டுக் கொள்ளலாம். @ அடைக்கு அரைக்கும் போது மர வள்ளிக் கிழங்கை உரித்து சில துண்டுகள் நேர்த்து அரைக்கலாம். உருளைக் கிழங்கையும் துண்டுகளாக்கிப் போட்டு அரைக்கலாம். மொறுமொறுவென்று இருக்கும் அடை. @ மிஞ்சி விட்ட பழைய சோற்றை உப்பு போட்டுப் பிசைந்து நாலைந்து மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடி செய்து போட்டுக் கலந்து சிறிய உருண்டைகளாய் உருட்டி வெயிலில் வைத்து விடுங்கள். சோற்று வடாம் ரெடி. @ பச்சைக் கொத்துமல்லித் தழையைப் பச்சையாகவே துவையல் அரைக்கும் போது புளி போடுவதற்குப் பதிலாக ஒரு துண்டு மாங்காயைப் போட்டு அரைத்தால் சுவையும் மணமும் அதிகமாகும். @ மோர்க் குழம்பு வைக்கும் போது அரிநெல்லிக்காய் களை அரைத்துப் போட்டால் சுவை மிகுதியாக இருக்கும்.
Post a Comment