பஞ்சம அல்வா -- சமையல் குறிப்புகள்
பஞ்சம அல்வா ...

பஞ்சம அல்வா
தேவையானவை: ஜவ்வரிசி, அவல், சேமியா, மைதா மாவு, கோதுமை மாவு - தலா அரை கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கிலோ, நெய் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி, வெள்ளரி விதை - தலா கால் கப், பச்சை (அ) ஆரஞ்சு கலர் - அரை டீஸ்பூன்.
செய்முறை: ஜவ்வரிசி, அவல், சேமியா மூன்றையும் பாலில் ஊற வைத்து அரைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, மைதா மாவு கலந்து கரைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையை கம்பிப்பாகு பதத்தில் காய்ச்சி, இதில் மாவுக் கரைசலைக் கலந்து கிளறிக் கொள்ளவும். மாவு வேகும் அளவுக்கு அதில் சிறிது சிறிதாக வெந்நீர் ஊற்றிக் கிளறவும்.
பின்னர் கலர், நெய் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒட்டாமல் நெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கவும்.
வறுத்த முந்திரி, வெள்ளரி விதை சேர்க்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.
பஞ்சம அல்வா: கால் கப் சோள மாவை சேர்த்துச் செய்தால் அல்வாவில் மினுமினுப்பு கூடும்.
Post a Comment