மூட்டு வலிக்கு எளிய மருத்துவம்,---ஹெல்த் ஸ்பெஷல்
*குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குணமாகும். *குப்பை கீரையை அடிக்கடி உண...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_3067.html?m=0
*குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குணமாகும்.
*குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.
*சித்தரத்தை, அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.
*ஏழு முறை சுத்தம் செய்யப்பட்ட சோற்றுக் கற்றாழைச் சோறு 5 கிராம் உடன் 4 சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி உடனே மறையும்.
*பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத் தடுக்கலாம்.
*பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.
Post a Comment