தேங்காய்ப்பால்,தக்காளி,சாதம்--சமையல் குறிப்புகள்
தேவையான பொருள்கள்: பச்சை பட்டாணி - அரை கப் பச்சரிசி - அரைகிலோ தேங்காய்ப் பால் - 2 கப் தக்காளி - கால் கிலோ பச்சை மிளகாய் ...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_3262.html?m=0
தேவையான பொருள்கள்:
பச்சை பட்டாணி - அரை கப்
பச்சரிசி - அரைகிலோ
தேங்காய்ப் பால் - 2 கப்
தக்காளி - கால் கிலோ
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
உப்பு,எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, சீரகம் தலா - அரை ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்.
செய்முறை:
அரிசியை சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். நெய்,எண்ணெய் காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள். சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்துக் கலக்குங்கள்.சுவையான தக்காளி சாதம் ரெடி.
Post a Comment